
"ஒரு நடிகராக,உங்கள் குரல் மக்களிடம் எதிரொலிக்கும்; பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்": விஜய்சேதுபதிக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை
செய்தி முன்னோட்டம்
நவம்பர் 2021 இல், பெங்களூரு ஏர்போர்ட் தாக்குதல் வழக்கில், மகா காந்தி என்ற துணை நடிகர் தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கை, ரத்து செய்யக் கோரி, நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள், "நீங்கள் ஒரு திரைப்பட நடிகர். உங்கள் குரல், பொதுமக்களிடம் எதிரொலிக்கும். அதிக ரசிகர்கள் கொண்ட நடிகராக இருப்பதனால், நீங்கள் மிகவும் ஒழுக்கமானவராக இருக்க வேண்டும். பொறுப்புள்ள நபராக, நீங்கள் யாரையும் அவதூறாக குறிப்பிடக்கூடாது", என்று கூறினர்.
மேலும் இந்த வழக்கில் இருபக்கமும் தவறு இருப்பதாகவும், மத்தியஸ்தம் பேசி இருவரும் சமாதானமாக போவதற்கு, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
இருதரப்பும், மார்ச் 2, மத்தியஸ்த மையத்திற்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
ட்விட்டர் அஞ்சல்
விஜய் சேதுபதிக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை
#JUSTIN || நடிகர் விஜய்சேதுபதி மேல்முறையீடு - அறிவுறுத்தல்
— Thanthi TV (@ThanthiTV) February 10, 2023
பெங்களூரூ விமான நிலைய தாக்குதல் மேல்முறையீட்டு வழக்கில் விஜய் சேதுபதிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்
"விஜய் சேதுபதி போன்ற நடிகர் கட்டுப்பாடாக
நடந்திருக்க வேண்டும்" pic.twitter.com/C3Mc64zCUM