
வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்ககூடிய, சில தமிழ் நடிகர்களின் திரைப்பயணம்
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டில் தற்போதிருக்கும் பல முன்னணி நட்சத்திரங்களின் 'ஸ்டார்' அந்தஸ்திற்கு பின்னால் இருக்கும் வலியும், உழைப்பும் ஏராளம்.
அத்தகைய 'ஊக்கமளிக்கும்' சில திரைநட்சத்திரங்களின் பட்டியல் இதோ:
ரஜினிகாந்த்: 'சூப்பர்ஸ்டார்' என்ற பெயர் அவருக்கு தானாக வரவில்லை. தமிழ் சினிமாவின் ஆளுமை இவர். பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்தவர், தனது ஸ்டைலாலும், நடிப்பாலும் என்றென்றும் முடிசூடா மன்னனாக இருக்கும் ரஜினியின் கலைப்பயணம், மூன்று தசாப்தங்களை கடந்துவிட்டது.
சிலம்பரசன்: குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய STR , தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத இளம் ஹீரோ என்று கூறலாம். நடிப்பு மட்டுமின்றி, இசை, பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட சிம்பு, எத்தனை தடைகள் வந்தாலும், நம்பிக்கையுடன் மீண்டு வருவதால், இன்றும் அவருக்கும் ரசிகர்கள் ஏராளம்.
தமிழ் ஹீரோக்கள்
அவமானங்களையும் வலிகளையும் கடந்த வெற்றி பயணம்
விஜய் சேதுபதி: துணை வேடங்களில் நடிக்க தொடங்கி, தற்போது தமிழ், ஹிந்தி என இந்தியாவின் பல மொழிகளில், பலரால் விரும்பப்படும் நடிகராக வளர்ந்துள்ளார். இவரின் நடிப்பிற்க்காக தேசிய விருதும் வாங்கியுள்ளார். கதைக்கும், தனது நடிப்பிற்கு சவால் விடும் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து, முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவர்.
சிவகார்த்திகேயன்: ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெற்று, பின்னர் அதே ஷோவிற்கு தொகுப்பாளராக மாறி, படிப்படியாக தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக பார்க்கப்படும் சிவகார்த்திகேயனின் வெற்றி, அனைவரையும் வியக்க வைத்ததது. நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி கண்ட இவரின் திரைப்பயணத்திற்கு பின்னால் அவமானங்களும், வலிகளும் ஏராளம்.