Page Loader
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்
இந்த ஐந்து நீதிபதிகளையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த மாதம் பரிந்துரைத்தது

சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்

எழுதியவர் Sindhuja SM
Mar 03, 2023
03:30 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்தார். சுந்தரம் ஸ்ரீமதி, டி.பாரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது சபீக், ஜெ.சத்திய நாராயண பிரசாத் ஆகிய வழக்கறிஞர்கள் 2021ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த ஐந்து நீதிபதிகளையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த மாதம் பரிந்துரைத்தது.

இந்தியா

இந்தியா முழுவதும் 20 நிரந்தர நீதிபதிகள் நியமனம்

இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, சுந்தரம் ஸ்ரீமதி, டி.பாரத சக்கரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது சஃபீக், ஜெ.சத்திய நாராயண பிரசாத் ஆகிய கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ராஜா இந்த 5 நீதிபதிகளுக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று செய்திகள் கூறுகின்றன. இவர்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 20 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்ட்டுள்ளனர்.