லலித் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் போட்டியை அறிமுகம் செய்த லலித் மோடி, நீதிபதிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்த காரணத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல் முன்னாள் தலைவரான லலித் மோடி மீது ஏற்கனவே ஊழல், நிதி மோசடி மற்றும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனால் அவர் நாட்டை விட்டு தப்பிசென்றுவிட்டதாகவும், லண்டனில் வசிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், லலித் மோடியின் சமூக வலைத்தள பக்கத்தில் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டு இருந்தார்.
லலித் மோடி
நீதிமன்ற அவமதிப்பு கருத்து - லலித் மோடியை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம்
இதனால் அவர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் லலித் மோடி வழக்கறிஞர் வாதடியுள்ளார்.
அப்போது நீதிபதிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து, லலித் மோடி தேசிய நாளிதழில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், அவர் சட்டத்திற்கு மேலானவர் அல்ல எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு பதிவுகளை வெளியிட மாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் கடுமையாக உத்தரவிட்டுள்ளனர்.