Page Loader
தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 96வது திருக்குறள் விழா; உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பங்கேற்பு
இரா.கோ.ராஜாராம் எழுதிய 'குறளின் பயணம்' என்ற புத்தகத்தை வெளியிட்ட நீதிபதி ராமசுப்பிரமணியன்

தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் 96வது திருக்குறள் விழா; உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பங்கேற்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 05, 2023
04:06 pm

செய்தி முன்னோட்டம்

சிறப்புமிக்க தென்காசி நகரத்தில் அமைந்துள்ள பழமையான திருவள்ளுவர் கழகம், சமீபத்தில் தனது 96வது திருக்குறள் விழாவை துவங்கியது. ஆண்டுதோறும், கொடியேற்றத்துடன் துவங்கும் இந்த விழாவில், தமிழ் கூறும் வல்லுனர்களும், திருக்குறள் பால் பற்றுகொண்ட பண்டிதர்களும், பள்ளி மாணவர்களும் பங்கேற்பது வழக்கம். இந்த விழாவின் போது மாணவர்களுக்கு திருக்குறள் சார்நத போட்டிகளும் நடைபெறும். இந்த ஆண்டு, ஜூன் 3 ஆம் தேதி துவங்கிய இந்த விழாவில், வரும் ஜூன் 10ஆம் தேதி வரை பல்வேறு கருத்தரங்கங்கள், பொது கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை (ஜூன் 3) நடைபெற்ற விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதியான திரு.வெ. ராமசுப்பிரமணியன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

card 2

'குறளின் பயணம்' புத்தக வெளியீடு 

தன்னுடைய தமிழ் புலமைக்கு பெயர் பெற்ற நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் விழாவில் பங்கேற்று, திருக்குறளின் சிறப்புகளை பற்றி பேசினார். இந்த விழாவில், இந்த விழாவில், கழகத்தின் தலைவர், துரை.தம்புராஜ் வரவேற்புரை ஆற்ற, திரு. இரா.கோ.ராஜாராம் எழுதிய 'குறளின் பயணம்' என்ற புத்தகத்தையும் நீதிபதி வெளியிட்டார். அதை திருவள்ளுவர் கழகத்தின் செயலர் திரு.சிவராமகிருஷ்ணன் பெற்று கொண்டார். உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போதும், அதன் பின்னர் ஆந்திரா மாநிலம் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய போதும், இந்த விழாவிற்கு தவறாமல் வருகை தந்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த கழகத்தின் 100 வது ஆண்டு விழாவிலும் தான் கலந்துகொள்ள விரும்புவதாகவும் திரு.ராமசுப்பிரமணியன் குறிப்பிட்டார்.