
அமலாக்கத்துறை இயக்குனர் பதவி காலத்தினை நீட்டிக்க மத்திய அரசு கோரிக்கை
செய்தி முன்னோட்டம்
கடந்த வருடம், அமலாக்கத்துறை பதவி காலம் 2 ஆண்டுகள் என்பதனை மூன்று ஆண்டுகளாக நீட்டித்து மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றினை இயற்றியது.
இதனையடுத்து கடந்த 2022ம்ஆண்டு நவம்பர்.,18ம்தேதியோடு நிறைவடையவிருந்த அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தினை 2023ம்ஆண்டு நவம்பர் 18ம்தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதோடு 3 முறை இவருக்கு மத்தியஅரசு பதவிக்கால நீட்டிப்பினை வழங்கியுள்ளதால், இது சட்டவிரோதம் என்று கூறிய உச்ச நீதிமன்றம், இன்னும் 15 நாட்களில் புதிய அமலாக்கத்துறை இயக்குனரை நியமிக்கவேண்டும் என்றுக்கூறி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வரும் ஜூலை 31ம்தேதியோடு மிஸ்ராவின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இந்நிலையில் இவரின் பணிக்காலத்தினை நீட்டிக்கக்கோரி மத்திய அரசு இன்று(ஜூலை.,26)உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்த விசாரணை நாளை(ஜூலை.,27)உச்சநீதிமன்றத்தில் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பதவி காலம் நீட்டிப்பு
#JustIn | அமலாக்கத்துறை இயக்குனரின் பதவியை நீட்டிக்க ஒன்றிய அரசு முறையீடு!#SunNews | #EnforcementDirectorate | #SupremeCourt pic.twitter.com/HoPI6MhLDM
— Sun News (@sunnewstamil) July 26, 2023