அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ரா பதவி காலம் மீண்டும் நீட்டிப்பு - உச்சநீதிமன்றம்
2022ம் ஆண்டு நவம்பர்.,18ம் தேதியோடு நிறைவடையவிருந்த அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தினை 2023ம்ஆண்டு நவம்பர் 18ம்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு உத்தரவிட்டது. இதோடு 3 முறை இவருக்கு மத்தியஅரசு பதவிக்கால நீட்டிப்பினை வழங்கியுள்ளதால், இது சட்டவிரோதம் என்று கூறிய உச்ச நீதிமன்றம், இன்னும் 15 நாட்களில் புதிய அமலாக்கத்துறை இயக்குனரை நியமிக்கவேண்டும் என்றுக்கூறி உத்தரவிட்டது. இதனையடுத்து இவரின் பணிக்காலத்தினை நீட்டிக்கக்கோரி மத்திய அரசு நேற்று(ஜூலை.,26)உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இதுகுறித்த விசாரணை இன்று(ஜூலை.,27)நடந்தது, அப்போது எஸ்.கே.மிஸ்ரா தவிர மற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் திறமையற்றவர்களா?அவரில்லாமல் இத்துறை செயல்பட முடியாதா?என்று நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. இதற்குமேல் நீட்டிப்பு செய்யப்படக்கூடாது என்று எச்சரிக்கையும் விடுத்தது. அதன்பின்னர் நீதிமன்றம் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலத்தினை வரும் செப்டம்பர் 15ம்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.