பிரதமர் மோடி: செய்தி
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை மும்பையில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பை(MTHL) பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு 11 நாள் சிறப்பு சடங்குகளை செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி
ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.
'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்
மாலத்தீவுடனான இராஜதந்திர மோதல்களுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான தரக்குறைவான கருத்துக்கள் மாலத்தீவு அரசாங்கத்தின் "குறுகிய பார்வையை" காட்டுகிறது என்றும், இந்தியா நம்பகமான நட்பு நாடாக இருந்து வருகிறது என்றும் அந்த நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமது திதி கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு
பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்திற்கு பிறகு அதிகம் பேர் அந்த இயற்கை எழில் கொஞ்சும் தீவை சுற்றுலாவுக்காக தேட தொடங்கியுள்ளனர் என்று மேக்மைட்ரிப் தெரிவித்துள்ளது.
இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக 3 அமைச்சர்களை இடைநீக்கம் செய்தது மாலத்தீவு அரசு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக மாலத்தீவு அரசு, தனது அமைச்சர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்துள்ளது.
பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்: சீறி எழும் இந்தியா
மாலத்தீவு நாட்டின் அமைச்சர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா: கலிபோனியாவில் இந்திய எதிர்ப்பு வாசகங்களால் சிதைக்கப்பட்ட மற்றொரு இந்து கோவில்
அமெரிக்காவின் கலிபோனியா மாகாணத்தின் ஹேவர்டில் உள்ள ஒரு இந்து கோவில், காலிஸ்தான் ஆதரவு மற்றும் இந்திய எதிர்ப்பு வாசகங்களால் சிதைக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் 'கேலோ இந்தியா' போட்டிகளை நடத்தவுள்ளது.
'கேப்டன் விஜயகாந்த் எனும் உற்ற நண்பன்': புதிய வலைப்பதிவை வெளியிட்டார் பிரதமர் மோடி
டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்த நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பிரதமர் மோடி இன்று ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கு அழைப்பு
அயோதியில் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டன்; விஜயகாந்துக்கு மோடி புகழஞ்சலி
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் கேப்டன் என்று கூறி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார்.
திருச்சி சர்வதேச விமான நிலைய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
தமிழகம், லட்சத்தீவு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு செல்ல பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது இரண்டு நாள் பயணத்தைத் தொடங்கினார்.
திருச்சியில் பிரதமர் மோடி: ரூ.20,000 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்கள் தொடக்கம்
திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் இன்று கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் உட்பட விமானம், ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, கப்பல் போக்குவரத்து மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு ரூ.20,000 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களை அர்ப்பணித்தார்.
அனைவருக்கும் 2024ம் ஆண்டு சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்: பிரதமர் மோடியின் புத்தாண்டு வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி இன்று ட்விட்டர் மூலம் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனவரி 2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; ₹19,850 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் ஜனவரி 2,3 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளுக்கு வர உள்ளதாக அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்துக்கு மத்திய அரசு தடை
பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாத கட்சியான தெஹ்ரீக்-இ-ஹுரியத்தை, பயங்கரவாதத்தை தூண்டுவதற்காகவும், இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை பரப்புவதற்காகவும் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பதை தவிர்க்க பிரதமர் வேண்டுகோள்
ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு, பக்தர்கள் வருவதை தவிர்க்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமரின் வருகைக்கு தயாராகும் அயோத்தி: ரயில் நிலையம், புதிய விமான நிலையம் இன்று திறக்கப்பட உள்ளன
அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் மற்றும் புதிய விமான நிலையத்தை திறந்து வைக்க செல்லும் பிரதமர் நரேந்திர மோடியை நாடு முழுவதும் உள்ள பல்வேறு கலைஞர்கள் இன்று வரவேற்க உள்ளனர்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு: என்எஸ்ஜி கமாண்டோக்கள், 5,000 போலீசார் குவிப்பு
டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி அயோத்தி செல்வதையொட்டி, நான்கு தேசிய பாதுகாப்பு படை(என்எஸ்ஜி) குழுக்கள் உட்பட, 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல்
அயோதியில் டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்படும் புதிய விமான நிலையத்திற்கு, 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் அயோத்தியாதாம்' என பெயர் சூட்டப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கத்தாரில் 8 முன்னாள் இந்திய வீரர்களின் மரண தண்டனை சிறைத் தண்டனையாக குறைப்பு- தகவல்
கத்தார் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 8 முன்னாள் இந்திய வீரர்களுக்கு, அக்டோபர் மாதம் விதிக்கப்பட்ட மரண தண்டனை, தற்போது சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கேப்டன் விஜயகாந்த் மரணம்: முதல்வர் ஸ்டாலின் முதல் பிரதமர் மோடி வரை இரங்கல்
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை 6 மணி அளவில், நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
போர் முடிந்த பிறகு, பிரதமர் மோடியை ரஷ்யாவிற்கு அழைத்த விளாடிமிர் புடின்
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் உடனான ஆலோசனைக்கு பின், பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடக்கும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அதிபர் புடினை சந்திப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.
கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் துவக்கம்
'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் வந்தே பாரத் ரயில்கள் உள்நாட்டு தொழில்நுட்பம் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க இருக்கிறார் மம்தா பானர்ஜி
அயோத்தி ராம ஜென்ம பூமியில் ஜனவரி 22ம் தேதி நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார் நிர்மலா சீதாராமன்
கடந்த 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டியது.
'இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு': பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது இல்லத்தில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
வெள்ள பாதிப்பு: முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினார் பிரதமர் மோடி
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதிய விமான நிலைய டெர்மினலை திறந்து வைக்க திருச்சி வருகிறார் பிரதமர் மோடி
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய டெர்மினலை திறந்து வைக்க பிரதமர் மோடி வரும் ஜனவரி 2ஆம் தேதி திருச்சி வர இருக்கிறார்.
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, இம்மானுவேல் மக்ரோனை இந்தியா அழைத்திருப்பதாக தகவல்
அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை இந்தியா அழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர், கனடா இந்தியா உறவுகளில் மாற்றம்- ஜஸ்டின் ட்ரூடோ
காலிஸ்தான் பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்ய இந்தியர் முயன்றதாக, அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர் இந்திய-கனடா உறவுகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
சட்டபூர்வ நடவடிக்கைக்கு உறுதி: பன்னூன் படுகொலை சதி குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி
அமெரிக்க குடியுரிமை பெற்ற காலிஸ்தானி பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல, இந்திய அதிகாரி சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இறுதியாக மவுனம் கலைத்தார்.
காசா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நெதன்யாகுவிடம் மோடி வலியுறுத்தல்
காசா மீதான இஸ்ரேல் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும், நிவாரண உதவிகளை அதிகரிக்கவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான தொலைபேசி உரையாடலில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
வெள்ள நிவாரணத் தொகையாக பிரதமரிடம் ₹12,000 கோடி கோரினார் முதல்வர் ஸ்டாலின்
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தென் தமிழ்நாட்டின் பல பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் ₹12,000 கோடியை முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் உரையை நிகழ்நேரத்தில் தமிழில் மொழிபெயர்த்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்
கடந்த டிசம்பர் 17ம் தேதியன்று வாரனாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கம நிகழ்வில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரதமர் மோடி இந்தியில் பேச, தொழில்நுட்பத்தின் உதவியுடன் அங்கு கூடியிருந்த தமிழ் மக்களுக்கு அது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
2023ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மலர்ந்த புதிய உதயங்கள் - ஓர் செய்தி குறிப்பு !
திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம்.,ஆண்டு டெல்லி-வாரணாசி இடையே துவக்கி வைக்கப்பட்டது.
வீடியோ: வாரணாசி ரோட்ஷோவின் போது ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற பிரதமர் மோடியின் வாகனங்கள்
இன்று வாரணாசியில் நடந்த ரோட்ஷோவின் போது, ஒரு ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக தனது கான்வாய் வாகனங்களை நிறுத்தினார் பிரதமர் மோடி. அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
காசி தமிழ் சங்கத்தின் இரண்டாம் பதிப்பை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் பதிப்பை வாரணாசியில் உள்ள 'நமோ காட்' என்ற இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். டிசம்பர் 17 முதல் 30 வரை இந்த கலாச்சார விழா நடைபெற இருக்கிறது.
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது, கவலை அளிக்கிறது': பிரதமர் மோடி
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் 'துரதிர்ஷ்டவசமானது மற்றும் கவலைக்குரியது' என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சூரத் டைமண்ட் போர்ஸை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்க இருக்கிறார்.