அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கு அழைப்பு
செய்தி முன்னோட்டம்
அயோதியில் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழை, ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் வழங்கினார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அர்ஜுன மூர்த்தி, தனது வாழ்நாளில் கிடைத்த அரும்பாக்கியமாக இந்த நிகழ்வு அமைந்ததாக கூறியுள்ளார்.
மேலும், அர்ஜுன் மூர்த்தியுடன் சில ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும், ரஜினிக்கு அழைப்பிதழ் வழங்கும் போது உடன் இருந்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் வழங்கும் அர்ஜுன மூர்த்தி
எனது வாழ்நாளில் கிடைத்த அரும்பாக்கியமாக இன்றைய நிகழ்வு அமைந்தது!
— Ra.Arjunamurthy | ரா.அர்ஜூனமூர்த்தி (@RaArjunamurthy) January 2, 2024
நம் அன்பு தலைவர் திரு. @rajinikanth அவர்களை அவரது இல்லத்தில் சென்று அயோத்தி, ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் அவரது குடும்பத்தினரையும் ஜனவரி 22 ம்தேதி அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வுக்கு வரவேண்டி ஆர்.எஸ்.எஸ்… pic.twitter.com/UcHakkRdLW
2nd card
அமிதாப்பச்சன், மாதுரி தீட்சித் உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கு அழைப்பு
ஜனவரி 22 ஆம் தேதி நண்பகல் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, ஏற்கனவே பல சினிமா பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர்களான அமிதாப்பச்சன், மாதுரி தீட்சித், அனுபம் கெர், அக்ஷய் குமார் மற்றும் பிரபல இயக்குனர்கள் ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோருக்கும்,
தென்னிந்திய திரை பிரபலங்களான சிரஞ்சீவி, மோகன்லால், தனுஷ் மற்றும் ரிஷப் ஷெட்டி ஆகியோருக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
3rd card
ஜனவரி 16ம் தேதி முதல் தொடங்கும் கும்பாபிஷேக சடங்குகள்
சினிமா பிரபலங்கள் தவிர, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 4,000 யோகிகளுக்கும் விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அயோத்தியில் ராம் லல்லாவின் (குழந்தை பகவான் ராமர்) பிரான்-பிரதிஷ்தா (பிரதிஷ்டை) விழாவிற்கான வேத சடங்குகள், கும்பாபிஷேக விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே, ஜனவரி 16ம் தேதி தொடங்குகிறது.
வாரணாசியைச் சேர்ந்த வேத புரோகிதர், லக்ஷ்மி காந்த் தீட்சித் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார்.
விழாவிற்கு 6,000 முக்கிய பிரமுகர்களும், 10,000- 15,000 பக்தர்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.