Page Loader
திருச்சி சர்வதேச விமான நிலைய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

திருச்சி சர்வதேச விமான நிலைய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி 

எழுதியவர் Sindhuja SM
Jan 02, 2024
01:52 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம், லட்சத்தீவு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு செல்ல பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது இரண்டு நாள் பயணத்தைத் தொடங்கினார். தென் இந்திய பகுதிகளுக்கு அவர் மேற்கொள்ளும் இந்த பயணத்தின் போது, ​​பல மேம்பாட்டு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக திருச்சியில் இறங்கிய பிரதமர் மோடி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, தமிழகத்தில் பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர், கவிஞர் பாரதிதாசனின் 'புதியதோர் உலகம் செய்வோம்' தமிழ் கவிதையை மேற்கோள் காட்டி, இளைஞர்கள் ஏற்கனவே அத்தகைய உலகை உருவாக்கி வருகின்றனர் என்றார்.

ஜ்வ்க்கே

திருச்சி புதிய விமான முனையத்தை பற்றிய தகவல்கள் 

இன்று, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட முனையக் கட்டிடத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரதம மந்திரி அலுவலகத்தின்(PMO) அறிக்கையின்படி, இந்த புதிய சர்வதேச முனையம் ஆண்டுதோறும் 44 லட்சம் பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பீக் ஹவர்ஸில் சுமார் 3,500 பயணிகளுக்கு இடமளிக்கக்கூடிய முனையம் இதுவாகும். திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் சர்வதேச பயணிகள் போக்குவரத்துக்கு வழிவகுக்கும் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையம் ஆகும். புதிய முனைய கட்டிடத்தில் 60 செக்-இன் கவுண்டர்கள், 5 பேக்கேஜ் கேரசல்கள், 60 வருகை குடிவரவு கவுன்டர்கள் மற்றும் 44 புறப்படும் குடியேற்ற கவுண்டர்கள் உள்ளன. புதிய முனைய கட்டிடத்தின் வடிவமைப்பு திருச்சிராப்பள்ளியின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.