பிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தியில் உச்சகட்ட பாதுகாப்பு: என்எஸ்ஜி கமாண்டோக்கள், 5,000 போலீசார் குவிப்பு
செய்தி முன்னோட்டம்
டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி அயோத்தி செல்வதையொட்டி, நான்கு தேசிய பாதுகாப்பு படை(என்எஸ்ஜி) குழுக்கள் உட்பட, 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
அயோதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தை திறந்து வைப்பதற்காக, நாளை காலை 10:45 அங்கு வரும் பிரதமர், விழாவை முடித்துக் கொண்டு நண்பகல் 2:15 மணிக்கு மீண்டும் டெல்லி திரும்புகிறார்.
இதற்காக, ஆறு கம்பெனி மத்திய துணை ராணுவப் படை வீரர்கள், அயோத்திக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை தலைமை இயக்குனர்(டிஜிபி) அலுவலகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், இன்று 2,000 காவலர்கள் அயோத்தி நகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
2nd card
மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
நன்கு ஒழுங்கு படுத்தப்பட்ட மற்றும் எதிர்வினை ஆற்றக்கூடிய பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையில், 17 காவல் கண்காணிப்பாளர்கள், 40 கூடுதல் எஸ்பிக்கள், 82 வட்ட ஆய்வாளர்கள், 90 ஆய்வாளர்கள் ஆகியோர் முக்கிய இடங்களில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
விழா நடைபெறும் பகுதி மூன்று சூப்பர் மண்டலங்கள் மற்றும் 14 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அனைத்திலும் டிஐஜி அந்தஸ்திலான அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொள்கின்றனர்.
தொழில்நுட்ப முன்னேற்றங்களை போற்றும் வகையில்,செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ட்ரோன்கள் வானில் இருந்து பாதுகாப்பை கண்காணிக்க பணியமர்த்தப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக, விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி அயோத்திக்கு வருவது குறிப்பிடத்தக்கது.