கத்தாரில் 8 முன்னாள் இந்திய வீரர்களின் மரண தண்டனை சிறைத் தண்டனையாக குறைப்பு- தகவல்
செய்தி முன்னோட்டம்
கத்தார் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 8 முன்னாள் இந்திய வீரர்களுக்கு, அக்டோபர் மாதம் விதிக்கப்பட்ட மரண தண்டனை, தற்போது சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறைக்கப்பட்ட தண்டனையின் விதிமுறைகள், இன்னும் தெளிவாக இல்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும், விரிவான தீர்ப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்கள் மற்றும் வீரர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக விவரித்துள்ளது.
இந்த தண்டனை குறைப்பு, துபாயில் நடந்த காப் 28 மாநாட்டில் கத்தார் எமரி ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி உடன், பிரதமர் மோடியின் சந்திப்புக்கு பிறகு வெளிவந்துள்ளது.
அவர்களின் உரையாடலின் விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றாலும், முன்னாள் வீரர்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.
2nd card
கைது செய்யப்பட்ட வீரர்கள் யார்?
கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் சுகுணாகர் பகாலா, கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரப் வசிஷ்ட் மற்றும் மாலுமி ராகேஷ் கோபகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்ட 8 முன்னாள் வீரர்கள் ஆவர்.
வீரர்களின் சிலர் இந்திய போர்க்கப்பல்களை வழிநடத்திய அனுபவம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் அங்கு, கத்தாரின் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
இஸ்ரேல் நாட்டிற்காக உளவு பார்த்ததாக கூறி, கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, இந்த ஆண்டு அக்டோபரில் மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.