அமெரிக்கா: கலிபோனியாவில் இந்திய எதிர்ப்பு வாசகங்களால் சிதைக்கப்பட்ட மற்றொரு இந்து கோவில்
அமெரிக்காவின் கலிபோனியா மாகாணத்தின் ஹேவர்டில் உள்ள ஒரு இந்து கோவில், காலிஸ்தான் ஆதரவு மற்றும் இந்திய எதிர்ப்பு வாசகங்களால் சிதைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் ஷெராவாலி கோவில் பெயர் பலகை சர்ச்சைக்குரிய வாசகங்களால் சிதைக்கப்பட்டுள்ள நிலையில், கலிபோனியாவில் இரண்டு வாரங்களில் இரண்டாவதாக சிதைக்கப்படும் இந்து கோயில் இதுவாகும். கடந்த மாதம், டிசம்பர் 23 அன்று, ஸ்வாமிநாராயண் மந்திர் வசன சன்ஸ்தா ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திர் கோவில் சுவர்களில், பிரதமர் நரேந்திர மோடியை "பயங்கரவாதி" என்றும், "ஷாஹீத் (தியாகி) பிந்தரன்வாலே" என்றும் குறிப்பிட்டு காலிஸ்தானி சார்பு சுவரொவியங்கள் வரையப்பட்டிருந்தது.
சம்பவத்தை வெளிக்கொண்டு வந்த இந்து அமெரிக்கன் அறக்கட்டளை
தி இந்து அமெரிக்கன் அறக்கட்டளை (HAF) எக்ஸ் வலைதளத்தில் சிதைக்கப்பட்ட இந்து கோவிலின் புகைப்படத்தை பதிவிட்டு, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. "மற்றொரு இந்து கோயில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களால் விரிகுடா பகுதியில் சிதைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் சிதைக்கப்பட்ட பின், ஒரு வாரம் வாரத்திற்கு முன் சிவ துர்கா கோயில் கொள்ளையடிக்கப்பட்டதற்கு பின், ஹேவர்டில் உள்ள விஜய்யின் ஷெராவாலி கோவிலும் சிதைக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்துடன் இது குறித்து நாங்கள் தொடர்பில் உள்ளோம். காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என பதிவிடப்பட்டிருந்தது. காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்து கோயில்கள் சிதைக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், கோயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டியதன் அவசியத்தை தி இந்து அமெரிக்கன் அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.
கோவில் சிதைக்கப்பட்டது தொடர்பாக தி இந்து அமெரிக்கன் அறக்கட்டளையின் ட்விட்
கனடா, அமெரிக்காவில் அதிகரிக்கும் இந்து கோயில் தாக்கப்படும் சம்பவங்கள்
அண்மை நாட்களாக கனடா மற்றும் அமெரிக்காவில், இந்து கோவில்களில் கொள்ளை சம்பவங்களும், சிதைக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையில், ஜனவரி 2023 இல், ஆஸ்திரேலியாவில் மூன்று கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கனடாவில் கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்களின் போதும் காலிஸ்தான் ஆதரவாளர்கள், விழாவில் இடையூறுகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிராக, கடந்த மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தனது கவலைகளை வெளிப்படுத்தி இருந்தார்.