Page Loader
அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல்

அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல்

எழுதியவர் Srinath r
Dec 29, 2023
09:57 am

செய்தி முன்னோட்டம்

அயோதியில் டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்படும் புதிய விமான நிலையத்திற்கு, 'மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் அயோத்தியாதாம்' என பெயர் சூட்டப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமான நிலையம் முன்பு, 'மர்யதா புர்ஷோத்தம் ஸ்ரீ ராம் அயோத்தி சர்வதேச விமான நிலையம்' என்று அழைக்கப்பட்டது. இதற்கு தற்போது, ராமாயணத்தை எழுதிய வால்மீகியின் பெயர் சூட்டப்படும் என கூறப்படுகிறது. ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்னர், டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடியால் இந்த விமான நிலையம் திறந்து வைக்கப்படுகிறது.

2nd card

அயோதிக்கு, மும்பை, டெல்லி அகமதாபாத்தில் இருந்து விமான சேவை

திறந்து வைக்கப்பட்ட நாள் முதல், இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் விமான சேவையை வழங்குகின்றன. இந்த விமான நிறுவனங்கள் ஏற்கனவே, மும்பை, டெல்லி மற்றும் அகமதாபாத்தில் இருந்து அயோத்திக்கு விமானங்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ₹1,450 கோடி செலவில், 6,500 சதுர பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையம், பரபரப்பான சமயங்களில் 600 பயணிகளையும், ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் பயணிகளையும் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டது. மேலும், பரபரப்பான சமயங்களில் 3,000 பயணிகளை கையாளும் வகையிலும், ஆண்டுக்கு 60 லட்சம் பயணிகள் வந்து செல்லும் வகையிலும், 50,000 சதுர அடி பரப்பளவில் மற்றொரு முனையம் கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.