தமிழ் திரைப்படம்: செய்தி
மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தின் வசனகர்த்தா ராசீ தங்கதுரை காலமானார்
தமிழ் திரையுலகின் பிரபல வசனகர்த்தா ராசீ தங்கதுரை என்கிற தாமஸ் உடல் நலக்குறைவால், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே காலமானார். அவருக்கு வயது 53.
லியோ 25வது நாள்- போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் பெருமிதம்
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம், 25 நாட்களைக் கடந்து சாதனை படைத்ததை, தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
ரீவைண்ட்: இறைவி- கார்த்திக் சுப்புராஜின் ஆல் டைம் கிளாசிக்
எந்தவொரு இயக்குனரின் படைப்பும் அவர்களுக்கே தனித்துவத்துடன் முத்திரை குத்தப்பட்டிருக்கும். அதுபோலவே கார்த்திக் சுப்புராஜ் படங்களும் நிச்சயமாக அத்தகைய தனித்துவமான படைப்புகள் ஆகும்.
அனுஷ்காவின் 50வது படமாக உருவாகிறது பாகமதி 2
உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படங்களுக்கு பின் நடிகை அனுஷ்கா, ஜி அசோக் இயக்கத்தில் 'பாகமதி' என்ற படத்தில் நடித்திருந்தார்.
'கண்கள் இரண்டால்' முதல் 'மஞ்சள் வெயில் மாலை' வரை- தமிழ் சினிமாவின் முதல் பெண் பாடலாசிரியர தாமரை ஹிட்ஸ்
தமிழ் சினிமாவில் முதல் பெண் பாடலாசிரியரான தாமரை இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ரஜினி கமல் இணைந்து நடிக்கிறார்களா? கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், SJ சூர்யா, ராகவா லாரன்ஸை வைத்து ஜிகர்தண்டா டபுள்X என்ற படத்தை இயக்கியுள்ளார்.
ராகவா லாரன்ஸை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் அற்புதன் காலமானார்
நடன கலைஞர் ராகவா லாரன்ஸை, அற்புதம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் அற்புதன் காலமானார். அவருக்கு வயது 52.
உலக நாயகன் பிறந்தநாள்- சினிமாவில் அவர் புகுத்திய புதுமைகளின் ஒரு தொகுப்பு
தமிழ் சினிமாவின் நடிப்பு சக்கரவர்த்திகளில் ஒருவரான உலகநாயகன் கமலஹாசன், இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
நடிகர் விஜய்க்கு இயக்குனர் வெற்றிமாறன் அரசியல் அட்வைஸ்
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் அவர், கள செயல்பாடுகளில் ஈடுபட வேண்டுமென, இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
#1YearOfLoveToday- மீண்டும் திரைக்கு வரும் லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நாளையுடன் ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு, மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அயலான் திரைப்படத்திற்காக 6 ஆண்டுகள் காத்திருந்தது கஷ்டமாக இருந்தது- இயக்குனர் ரவிக்குமார்
இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இயக்குனர் ரவிக்குமார், தன் இரண்டாவது படமாக சிவகார்த்திகேயனை வைத்து அயலானை உருவாக்கியுள்ளார்.
மார்க் ஆண்டனி படத்தின் எழுத்தாளர் இயக்கத்தில் செவிலியராக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அடுத்த படத்தில், செவிலியராக நடிக்க இருப்பதாக படத்தின் இயக்குனர் சவரி முத்து தெரிவித்துள்ளார்.
கரகாட்டக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்
கரகாட்டக்காரன், மேல்நாட்டு மருமகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜூனியர் பாலையா, சென்னையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 70.
KH234 படத்தில் முதல் முறையாக இணையும் திரிஷா, நயன்தாரா
இயக்குனர் மணிரத்தினம் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் உருவாகும், KH234 திரைப்படத்தில் முதல் முறையாக திரிஷாவும், நயன்தாராவும் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெட்ப்ளிக்சில் நாளை வெளியாகிறது ஜவான் திரைப்படத்தின் எக்ஸ்டெண்டெட் கட்
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தின் எக்ஸ்டெண்டெட் கட், நாளை நெட் ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரமின் தங்கலான் டீசர் வெளியானது
நடிகர் விக்ரம், இயக்குனர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
படக்குழுவினருக்கு மருத்துவ முகாம் நடத்த கேட்டுக் கொண்ட நடிகர் அஜித்
விடாமுயற்சி பட குழுவினருக்கு மருத்துவ முகாம் நடத்த, தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் அஜித் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு பின்னர் அந்த பதிவை நீக்கிய பிரேமம் இயக்குனர்
தான் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் சினிமாவை விட்டு விலகுவதாகவும், யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை எனவும் பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பதிவிட்டிருந்தார்.
இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு தேவையான சிகிச்சை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
தனியார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையால், உடல்நல குறைவு ஏற்பட்டு, 5 ஆண்டுகளாக படுக்கையில் இருக்கும் இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு, தேவையான சிகிச்சை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி
நவம்பர் 1 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு, தமிழ்நாடு காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
'தலைவர் 170' படப்பிடிப்பு- 33 ஆண்டுகளுக்கு பின் இணைந்த அமிதாப்பச்சன்-ரஜினிகாந்த் கூட்டணி
மும்பையில் நடந்த #தலைவர்170 படப்பிடிப்பில் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக பட தயாரிப்பு நிறுவனமான லைகா ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
நவம்பர் 3ஆம் தேதி வெளியாகிறது இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இன்ட்ரோ வீடியோ நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.
நவம்பர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது விக்ரம் பிரபுவின் 'ரெய்டு'
இயக்குநர் கார்த்தி இயக்கத்தில், நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள ரெய்டு திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு, ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது தங்கலான் திரைப்படம்
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் விக்ரம், மாளவிகா மேனன் நடிக்கும் தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது.
ஜெயிலர் வசூல் சாதனையை முறியடிக்க இருக்கும் லியோ
லியோ திரைப்படம் வெளியான 7 நாட்களுக்குள் ₹461 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி, தமிழ் சினிமாவில் 7 நாட்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
ஃபுல் ஃப்ரேம் லென்ஸ்கள், 8k கேமராவில் படமாக்கப்பட்ட துருவ நட்சத்திரம்
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம், வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
"33 வருடங்கள் கழித்து...": அமிதாப் பச்சனுடன் நடிப்பது குறித்து சிலாகித்த ரஜினி
ரஜினிகாந்த், தனது அடுத்த படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைகிறார் என்பது தெரிந்த செய்தியே.
துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் விக்ரம் கூட்டணியில் 7 ஆண்டுகளாக திரைக்கு வர காத்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது.
லியோ பாடல் காப்பியடிக்கப்பட்டதா?- 'பீக்கி பிளைண்டர்ஸ்' இசையமைப்பாளர் ஒட்னிக்கா பதில்
லியோ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'ஆர்டினரி பர்சன்' பாடல் காப்பி அடிக்கப்பட்டது என்ற ரசிகர்களின் குற்றச்சாட்டுக்கு 'பீக்கி பிளைண்டர்ஸ்' இசையமைப்பாளர் ஒட்னிக்கா பதில் அளித்துள்ளார்.
'தளபதி 68' பூஜை வீடியோ வெளியானது
லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின், நடிகர் விஜய் தனது 68வது திரைப்படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார்.
தமிழகத்தில் மூன்று நாட்களில் ₹80 கோடி வசூல் செய்த லியோ
அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லியோ திரைப்படம், தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் ₹80 கோடி வசூல் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது- கார்த்தி வெளியிட்ட அப்டேட்
சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நெட்பிளிக்ஸில் வெளியாகிறது சந்திரமுகி 2 திரைப்படம்
சந்திரமுகி 2 திரைப்படம் அக்டோபர் 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.
இங்கிலாந்தில் ஒரே நாளில் ₹5.75 கோடி வசூல் செய்த லியோ
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நேற்று லியோ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
சிங்கள இயக்குனரின் படத்தை வெளியிடும் மணிரத்தினம்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்தினம், சிங்கள இயக்குனரான பிரசன்ன விதானகே இயக்கிய 'பேரடைஸ்' என்ற திரைப்படத்தை தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் திரைக்கு கொண்டுவருகிறார்.
ஹிந்தியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டில் தணிக்கை சான்று பெற்றுக்கொள்ளலாம்
ஹிந்தியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டிலேயே தணிக்கை சான்று வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'கோ' திரைப்பட நாயகிக்கு திருமணம்?- இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம்
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்த ராதாவின் மூத்த மகளும், நடிகையுமான கார்த்திகா நாயர், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதை இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார்.
#AK63 படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?- ட்விட்டரில் வெளியிட்ட அப்டேட்
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்து நடிகர் அஜித்தை வைத்து இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது.
லியோவில் 'ஹெரால்டு தாஸ்' கதாபாத்திரத்தில் நடிக்க பிரித்திவிராஜ்-ஐ அணுகிய லோகேஷ்
உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியான லியோ திரைப்படத்தில், 'ஹெரால்ட் தாஸ்' கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மலையாள நடிகர் பிரித்திவிராஜை, லோகேஷ் கனகராஜ் அணுகியதாக கூறியுள்ளார்.
லியோ திரைப்படம் வெளியான திரையரங்கில் திருமணம்- புதுக்கோட்டையில் சுவாரசியம்
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று லியோ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.