
விக்ரமின் தங்கலான் டீசர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
நடிகர் விக்ரம், இயக்குனர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
கோலார் தங்க சுரங்கம் உருவானதில் தமிழர்களின் பங்கு குறித்த உண்மை கதையை தழுவி, தங்கலான் திரைப்படம் உருவாக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தில் மாளவிகா மோகன், பார்வதி திருவோத்து, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் மொத்த படப்பிடிப்பும் 120 நாட்களில் முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
படம் அடுத்த வருடம் குடியரசு தினத்தன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
தங்கலான் டீசர்
The son of Gold rises🔥⚔️
— Studio Green (@StudioGreen2) November 1, 2023
Unveiling the spine-chilling #ThangalaanTeaser✨
▶️https://t.co/Oxbmf5LuoG#Thangalaan #ThangalaanFromJan26@Thangalaan @chiyaan @beemji @kegvraja @officialneelam @parvatweets @MalavikaM_ @DanCaltagirone @gvprakash @NehaGnanavel @agrajaofficial… pic.twitter.com/LxuXmV6psC