
நெட்ப்ளிக்சில் நாளை வெளியாகிறது ஜவான் திரைப்படத்தின் எக்ஸ்டெண்டெட் கட்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தின் எக்ஸ்டெண்டெட் கட், நாளை நெட் ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜவான் திரைப்படத்தில், ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
நீண்ட நாட்களுக்குப் பின் ஷாருக்கானுக்கு வெற்றி படமாக அமைந்த இத்திரைப்படம், உலக அளவில் ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனையையும் படைத்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் படத்தின் எக்ஸ்டெண்ட் கட் வெளியிடப்படும் என இயக்குனர் அட்லி உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் நாளை நடிகர் ஷாருக்கானின் 58வது பிறந்தநாளை முன்னிட்டு, நெட்ப்ளிக்ஸ் தளத்தில் படத்தின் எக்ஸ்டெண்டெட் கட் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
நெட்ப்ளிக்ஸ் நாளை வெளியாகும் ஜவான்
#JawanOnNetflix 💥 pic.twitter.com/hcA8hcHuWL
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 1, 2023