Page Loader
ராகவா லாரன்ஸை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் அற்புதன் காலமானார்
இயக்குனர் அற்புதன் காலமானார்.

ராகவா லாரன்ஸை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் அற்புதன் காலமானார்

எழுதியவர் Srinath r
Nov 07, 2023
06:38 pm

செய்தி முன்னோட்டம்

நடன கலைஞர் ராகவா லாரன்ஸை, அற்புதம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் அற்புதன் காலமானார். அவருக்கு வயது 52. அண்மையில் ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயம் அடைந்த அற்புதன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மனதோடு மழைக்காலம், செப்பவே சிறுகாளி உள்ளிட்ட சில படங்களையும் இயக்கியுள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு அற்புதம் திரைப்படத்தை, ராகவா லாரன்ஸ், குணால் , அனு பிரபாகர் ஆகியோரை வைத்து, முக்கோண காதல் கதையாக இயக்குனர் அற்புதன் உருவாகி இருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, ராகவா லாரன்ஸ் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வழிவகை செய்தது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

இயக்குனர் அற்புதன் காலமானார்