
படக்குழுவினருக்கு மருத்துவ முகாம் நடத்த கேட்டுக் கொண்ட நடிகர் அஜித்
செய்தி முன்னோட்டம்
விடாமுயற்சி பட குழுவினருக்கு மருத்துவ முகாம் நடத்த, தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் அஜித் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை திரிஷா, அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் நிலையில், வில்லன்களாக சஞ்சய் தத் மற்றும் ஆரவ் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில், படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்க லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
2nd card
மருத்துவ முகாம் கட்டாயம்- அஜித்
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பாய்ஜானில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் கலை இயக்குனர் மிலன் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இது படக்குழுவினர் மற்றும் கலை துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், தயாரிப்பு நிறுவனத்திற்கு அஜித் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கலை இயக்குனர் மில்லனின் நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக, அனைவருக்கும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்ற விருப்பத்தை அஜித் கூறியுள்ளார். இதனை ஒப்புக்கொண்ட லைகா நிறுவனம், மருத்துவ முகாம் நடத்த சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விடாமுயற்சி திரைப்படத்திற்கு பின் நடிகர் அஜித், மார்க் ஆண்டனி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணைவது குறிப்பிடத்தக்கது.