
'தலைவர் 170' படப்பிடிப்பு- 33 ஆண்டுகளுக்கு பின் இணைந்த அமிதாப்பச்சன்-ரஜினிகாந்த் கூட்டணி
செய்தி முன்னோட்டம்
மும்பையில் நடந்த #தலைவர்170 படப்பிடிப்பில் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக பட தயாரிப்பு நிறுவனமான லைகா ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
ஜெய்லர் படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் ரஜினிகாந்த், ஜெய் பீம் பட இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கும் #தலைவர்170 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் அமிதாப்பச்சன் நடிப்பதாக படக்குழு அண்மையில் தகவல் வெளியிட்டது.
இதனை அடுத்து தற்போது, அமிதாப்பச்சன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதை, தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள லைகா நிறுவனம், மும்பையில் படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் கூறியுள்ளது.
அமிதாப்பச்சனுக்கு #தலைவர்170 முதல் நேரடி தமிழ் படம் என்பதும், ரஜினியுடன் 33 ஆண்டுகளுக்கு பின்னர் இணைவதும் குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
#தலைவர்170 குறித்து அப்டேட் வெளியிட்ட லைகா நிறுவனம்
When Superstar and Shahenshah met on the sets of #Thalaivar170 🤩
— Lyca Productions (@LycaProductions) October 29, 2023
Reunion on screens after 33 years! 🤗 #Thalaivar170 is gonna be double dose of legends! 💥 @rajinikanth @SrBachchan
Done with MUMBAI Schedule 📍📽️✨@tjgnan @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran… pic.twitter.com/LfyV3rP2JI