
'கோ' திரைப்பட நாயகிக்கு திருமணம்?- இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்த ராதாவின் மூத்த மகளும், நடிகையுமான கார்த்திகா நாயர், தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதை இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார்.
தமிழில், மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான 'கோ' திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுக கார்த்திகா நாயர், மொத்தமே 3 திரைப்படங்களில் தான் நடித்துள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் 'அன்னக்கொடி', எஸ்பி ஜெகநாதன் இயக்கத்தில் வெளியான 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை' என மூன்று படங்களில் மட்டுமே நடித்த கார்த்திகா நாயர் நடிப்பை விட்டு விலகி, ஹோட்டல் தொழிலில் ஈடுபட தொடங்கினார்.
தற்போது இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்திருப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இருப்பினும் தன் வருங்கால கணவர் குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை.
embed
நடிகை கார்த்திகா நாயருக்கு நிச்சயதார்த்தம்?
🧿https://t.co/AD3IrWYR1H— Karthika Nair (@KarthikaNair9) October 19, 2023