
இங்கிலாந்தில் ஒரே நாளில் ₹5.75 கோடி வசூல் செய்த லியோ
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நேற்று லியோ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
ரசிகர்களின் பெருத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான லியோ திரைப்படம், இங்கிலாந்தில் மட்டும் ஒரே நாளில் ₹5.75 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து படத்தை இங்கிலாந்தில் வெளியிட்ட அஹிம்சா என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இங்கிலாந்து முழுவதும் லியோ திரைப்படம் 5,71,500 பவுண்டுகள் வசூல் செய்ததாக கூறியிருந்தது. இது இந்திய மதிப்பில் ₹5.75 கோடியாகும்.
இந்த வரலாறு காணாத வசூல் மூலம் லியோ திரைப்படம், இங்கிலாந்தில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
Embed
வசூலை வாரி குவிக்கும் லியோ திரைப்படம்
The #LEO roar overseas is EARTH SHATTERING. Additional UK locations have reported their numbers, taking our opening day number to £571.5K. This is an ALL TIME Indian film record that will be stamped in the history books! 💥🤯🥵💣🌋 pic.twitter.com/AuDqID0T9g— Ahimsa Entertainment (@ahimsafilms) October 20, 2023