
'கண்கள் இரண்டால்' முதல் 'மஞ்சள் வெயில் மாலை' வரை- தமிழ் சினிமாவின் முதல் பெண் பாடலாசிரியர தாமரை ஹிட்ஸ்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் முதல் பெண் பாடலாசிரியரான தாமரை இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
கோவையில் பிறந்து, அரசு பள்ளியில் படித்து, சினிமாவிற்குள் நுழைந்து தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்ட கவிஞர் தாமரை, தமிழ் சினிமாவின் பல மறக்க முடியாத பாடல்களை நமக்கு வழங்கி இருக்கிறார்.
இவரது பாடல்களில் ஆங்கில வார்த்தைகள் இருக்காது, இரட்டை பொருள் தரும் வரிகள் இருக்காது. ஆனால் 'தவழும் தமிழ்' மட்டும் இவரின் பாடல்களில் நிறைந்திருக்கும்.
தனக்கென தனி பாணியை கொண்டு சினிமாவில் நுழைந்தவருக்கு, முதல் முதலில் சீமான் தான் இயக்கிய இனியவளே படத்தில், தென்றல் எந்தன் நடையைக்கேட்டது என்ற பாடலை எழுதும் வாய்ப்பை வழங்கினார்.
2nd card
மறக்க முடியாத ஹாரிஸ்- தாமரை கூட்டணி
அதன் பின்னர் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில், மல்லிகை பூவே பார்த்தாயா என்ற பாடல் மூலம் கவனிக்கப்பட்டார்.
பின்னர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்- தாமரை கூட்டணி பல வெற்றி பாடல்களை வழங்கி, தமிழ் சினிமா ரசிகர்களை இசையால் கட்டி போட்டது.
மின்னலே படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் இவரே எழுத, இவன் யாரோ, வசீகரா பாடல்கள் இன்றளவும் 90ஸ் கிட்ஸ் இன் பிளேலிஸ்ட்டை ஆள்கின்றன.
இதனைத் தொடர்ந்து வெளியான காக்க காக்க, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட படங்களில் இடம் பெற்ற பாடல்கள் வெற்றி பெற்ற, ஹாரிஸ் ஜெயராஜ் இசையும், தாமரையின் எழுத்தும் முக்கிய காரணமானது.
என்னை அறிந்தால் திரைப்படம் வரை, பல வெற்றி பாடல்களை இக்கூட்டணி தமிழ் சினிமாவிற்கு வழங்கியுள்ளது.
3rd card
தாமரையின் சில மறக்க முடியாத பாடல்கள்
கவிஞர் தாமரை, பல்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து மனதில் நிற்கும் பல பாடல்களை தாமரை எழுதியுள்ளார்.
அழகிய அசுரா, சுற்றும் விழி சுடரே, பார்த்த முதல் நாளே, கண்கள் இரண்டால், கண்ணான கண்ணே, மன்னிப்பாயா உட்பட பல நூறு பாடல்களை தாமரை எழுதியுள்ளார்.
சினிமா எழுத்து உலகில் இவர் செய்த சாதனைகளுக்காக, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்நாடு அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது, ஃபிலிம் பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
ஆண்கள் மட்டுமே அதிகம் செலுத்தி வந்த தமிழ் சினிமாவில், பெண் பாடலாசிரியராக நுழைந்து, பெண்களின் காதல், வலி, உணர்ச்சிகளை பாடல் வரிகள் மூலம் சொன்ன தாமரை, இன்னும் பல வெற்றி பாடல்களை எழுத அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.