
தமிழகத்தில் மூன்று நாட்களில் ₹80 கோடி வசூல் செய்த லியோ
செய்தி முன்னோட்டம்
அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லியோ திரைப்படம், தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் ₹80 கோடி வசூல் செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தை பல்வேறு சர்ச்சைகள் சுற்றி வந்த நிலையில், திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனையை படைத்து வருகிறது.
திரைப்படம் வெளியான அன்றே உலகம் முழுவதும் ₹148 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து, முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை பெற்றது.
இங்கிலாந்திலும் முதல் நாளில் 5.75 வசூல் செய்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் ₹80 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வசூல் சாதனை படைக்கும் லியோ திரைப்படம்
#JUSTIN "லியோ - 3 நாட்களில் ₹80 கோடி வசூல்"#Leo #ActorVijay #LokeshKanagaraj #Tamilnadu #news18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/mjp5OEEL78
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 22, 2023