Page Loader
KH234 படத்தில் முதல் முறையாக இணையும் திரிஷா, நயன்தாரா
KH234 திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது.

KH234 படத்தில் முதல் முறையாக இணையும் திரிஷா, நயன்தாரா

எழுதியவர் Srinath r
Nov 01, 2023
02:33 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் மணிரத்தினம் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் உருவாகும், KH234 திரைப்படத்தில் முதல் முறையாக திரிஷாவும், நயன்தாராவும் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் திரைப்படத்திற்கு பின் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமலஹாசன், மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் KH234 படத்திலும் நடித்து வருகிறார். நாயகன் படத்திற்கு பின் 36 ஆண்டுகளுக்கு கழித்து, கமலஹாசன் உடன் மணிரத்தினம் இத்திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கிய நிலையில், கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். தற்போது இப்படத்தில் நாயகிகள் ஆக திரிஷாவும், நயன்தாராவும் நடிப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

2nd card

முதல்முறையாக கமலுடன் இணையும் நயன்தாரா

தமிழ் சினிமாவில் இரண்டு தசாப்தங்களாக திரிஷாவும், நயன்தாராவும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதில் திரிஷா, கமலஹாசன் உடன் ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்காவனம் ஆகிய படங்களில் ஒன்றாக நடித்துள்ளார். ஆனால், நயன்தாராவிற்கு இப்படம் கமலஹாசன் உடன் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா நடிப்பில் அண்மையில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் அவர், மண்ணாங்கட்டி, அன்னபூரணி என கைவசம் ஆறு படங்களுக்கு மேல் வைத்துள்ளார். நடிகை திரிஷா, விஜய் உடன் இணைந்து நடித்த லியோ திரைப்படம் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.