Loading...
2026-க்கான ஆசியாவின் சிறந்த கடற்கரையாகத் தேர்வான தெற்கு கோவாவின் பாலோலெம்
2026-க்கான ஆசியாவின் சிறந்த கடற்கரையாக தெற்கு கோவாவின் பாலோலெம் தேர்வு செய்யப்பட்டது

2026-க்கான ஆசியாவின் சிறந்த கடற்கரையாகத் தேர்வான தெற்கு கோவாவின் பாலோலெம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 09, 2026
08:10 pm

செய்தி முன்னோட்டம்

கோவா என்றாலே பலரின் நினைவிற்கு வருவது அங்குள்ள வண்ணமயமான கடற்கரைகளே ஆகும். இந்நிலையில், தெற்கு கோவாவின் கனகோனா தாலுகாவில் உள்ள பாலோலெம் கடற்கரை ஆசிய அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. Beach.com வெளியிட்ட குளோபல் பீச் இண்டெக்ஸ் 2026 அறிக்கையில் பாலோலெம் ஆசியாவின் மிகச்சிறந்த கடற்கரையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச அளவில் டாப் 25 கடற்கரைகளின் பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

சுற்றுலா

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பாலோலெமின் இயற்கை எழில்

பாலோலெம் கடற்கரை தனது தனித்துவமான பிறை வடிவக் கரை, தூய்மையான வெள்ளை மணல் பரப்பு மற்றும் நிழல் தரும் தென்னை மரங்களால் சூழப்பட்டுள்ளது.

வட கோவா கடற்கரைகளின் அதிகளவிலான கூட்ட நெரிசலுடன் ஒப்பிடுகையில், இது அமைதியான சூழலையும் அமைதியான கடலலைகளையும் கொண்டுள்ளது.

இதனால் கடலோரத்தில் ஓய்வெடுக்க விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த கடற்கரை முதன்மைத் தேர்வாக விளங்கி வருகிறது.

சாகச நடவடிக்கை

சாகச நடவடிக்கைகள் மற்றும் சலனமற்ற சத்தப் பார்ட்டிகள்

அமைதியான சூழல் மட்டுமின்றி பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் பாலோலெம் புகழ்பெற்றது.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கயாகிங் (Kayaking) சாகசங்கள், டால்ஃபின்களைக் காணும் படகுப் பயணங்கள் மற்றும் குரங்குத் தீவு (Monkey Island) ஆய்வுகளை மேற்கொள்ளலாம்.

மேலும் ஒலிபெருக்கிகள் இன்றி ஹெட்போன்கள் மூலம் மட்டுமே இசையை ரசித்து நடனமாடும் 'சைலண்ட் நாய்ஸ்' (Silent Noise) பார்ட்டிகள், யோகா மையங்கள் மற்றும் ஸ்பாக்கள் இந்த கடற்கரையின் முக்கிய சிறப்பம்சங்களாகும்.

ADVERTISEMENT

தகுதி மதிப்பீடு

18 அளவுகோல்களின் அடிப்படையில் சர்வதேசத் தகுதி மதிப்பீடு

Beach.com அமைப்பானது உலகம் முழுவதிலும் உள்ள 322 கடற்கரைகளை விரிவாக ஆய்வு செய்து இப்பட்டியலைத் தயாரித்துள்ளது.

இதில் நீரின் தரம், அணுகல்தன்மை, உள்ளூர் நிலவரம், செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் கூகுள் மேப்ஸில் பதிவிடப்பட்ட 93,000-க்கும் மேற்பட்ட மதிப்புரைகள் (Reviews) ஆகியவை பரிசீலிக்கப்பட்டன.

பாலோலெம் கடற்கரையை பார்வையிட நவம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் மிகவும் ஏற்ற காலமாகும்.

ADVERTISEMENT