Loading...
₹500 நோட்டுகளையும் ரத்து செய்யணும்; ஊழலை ஒழிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்த அதிரடி கோரிக்கை
ஊழலை ஒழிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்த அதிரடி கோரிக்கை

₹500 நோட்டுகளையும் ரத்து செய்யணும்; ஊழலை ஒழிக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வைத்த அதிரடி கோரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 09, 2026
07:58 pm

செய்தி முன்னோட்டம்

ஆந்திர பிரதேச முதலமைச்சரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியத் தலைவருமான என்.சந்திரபாபு நாயுடு, நாட்டில் நிலவும் ஊழலை ஒழிக்க ₹500 மற்றும் ₹2,000 உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை ரத்து செய்ய வேண்டும் என புதுக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். சந்தையில் பெரிய அளவிலான ரொக்கப் பண பரிவர்த்தனைகளைத் தடுப்பது மட்டுமே ஊழல் சுழற்சியை உடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் பயன்பாட்டிற்கு ₹100 மற்றும் ₹200 தாள்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டிஜிட்டல் கரன்சி

டிஜிட்டல் கரன்சி மற்றும் தொழில்நுட்ப ரீதியான நிர்வாக முறை

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் சந்திரபாபு நாயுடு, டிஜிட்டல் கரன்சி தொடர்பான ஆய்வறிக்கைகளுக்கு தாம் ஏற்கனவே பல ஆலோசனைகளை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோரிக்கையைப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொடர்ந்து வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்தினால் நாட்டில் செல்வத்தை உருவாக்குவதும் வறுமையை ஒழிப்பதும் கடினமான காரியம் அல்ல என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 10-வது ஆண்டு நிறைவுப் பின்னணி

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மத்திய அரசு ₹500 மற்றும் ₹1,000 ரூபாய் தாள்களை செல்லாததாக அறிவித்து முக்கியத்துவம் வாய்ந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

இதன் 10-வது ஆண்டு நிறைவடைந்த மறுநாளில் சந்திரபாபு நாயுடு இத்தகைய கருத்துகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல மட்டங்களில் அமைப்பில் உள்ள குறைபாடுகளே ஊழல் தொடர்ந்து நீடிப்பதற்குக் காரணமாக அமைவதாகவும், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தாம் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

தேர்தல் அரசியல்

தேர்தல் அரசியலில் பண பலத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம்

தேர்தல் அரசியலில் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அரசியல் என்பது சேவை மனப்பான்மையுடன் மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும் நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலில் பெரும்தொகையைச் செலவு செய்து வெற்றிபெறும் தலைவர்கள், ஆட்சிக்கு வந்தபின் அந்த பணத்தை திரும்பப் பெற நினைக்கும் எண்ணம் உருவாகிறது.

தேர்தல் செலவுகளைக் குறைப்பதன் மூலம் இத்தகைய தவறான சிந்தனைகளை முற்றிலும் ஒழித்து, மக்கள் பிரதிநிதிகளைப் பொறுப்புள்ளவர்களாக மாற்ற முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT