Page Loader
அயலான் திரைப்படத்திற்காக 6 ஆண்டுகள் காத்திருந்தது கஷ்டமாக இருந்தது- இயக்குனர் ரவிக்குமார்
இயக்குனர் ரவிக்குமார், தான் பணம் சம்பாதிக்க சினிமாவிற்கு வரவில்லை என சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார்.

அயலான் திரைப்படத்திற்காக 6 ஆண்டுகள் காத்திருந்தது கஷ்டமாக இருந்தது- இயக்குனர் ரவிக்குமார்

எழுதியவர் Srinath r
Nov 02, 2023
07:09 pm

செய்தி முன்னோட்டம்

இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இயக்குனர் ரவிக்குமார், தன் இரண்டாவது படமாக சிவகார்த்திகேயனை வைத்து அயலானை உருவாக்கியுள்ளார். படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால், பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. ரவிக்குமார் தற்போது அயலான் திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் பேசிய அவர், "ஒரு படத்திற்காக 6 வருடம் காத்திருந்தது கஷ்டமாக இருந்தது", "இந்த காலத்தில் இரண்டு படங்களை இயக்கி இருக்கலாம். நிறைய பணம் சம்பாதித்து இருக்கலாம் என எல்லோரும் கூறினார்கள்" "ஆனால் நான் சினிமாவில் பணம் சம்பாதிக்க வரவில்லை. படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் நன்றாக இருக்கிறது என்று சொன்னால் போதும்" என தெரிவித்தார்.

2nd card

புற்றுநோயால் அம்மாவை இழந்த ரவிக்குமார்

அயலான் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, திடீரென புற்றுநோயால் தன் தாயை இழந்ததாக ரவிக்குமார் கண்ணீருடன் பதிவு செய்துள்ளார். எவ்வளவு முயன்றும் தன் தாயை காப்பாற்ற முடியவில்லை எனவும், தன் தாய் இறக்கும் முன் அயலான் திரைப்படத்தின் டீசரை அவருக்கு காட்டியதாகவும், அதை பார்த்துவிட்டு அவர் ஆங்கிலத் திரைப்படம் போல் உள்ளது, எனக் கூறியதாகவும் ரவிக்குமார் கூறியுள்ளார். மேலும் அயலான் திரைப்படத்தை, அம்மாவிற்கு காட்ட முடியாதது வருத்தமாக உள்ளதாக ரவிக்குமார் தெரிவித்தார். முன்னதாக அயலான் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், இந்த படத்திற்காக ரவிக்குமார் நிறைய உழைத்ததாகவும், அவருடன் இன்னொரு படத்தில் இணைய இருப்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.