அடுத்தாண்டு, ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது தங்கலான் திரைப்படம்
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் விக்ரம், மாளவிகா மேனன் நடிக்கும் தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் படத்தின் டீசர் நவம்பர் ஒன்றாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோலார் தங்க வயல்களில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்ட இக்கதையில், பசுபதி, பார்வதி திருவோது உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த வாரம், இப்படம் குறித்து இயக்குனர் ரஞ்சித் இடம் அப்டேட் கேட்டபோது, டீசர் தயாராகி விட்டதாகவும், முக்கியமாக அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகும் என தெரிவித்திருந்தார். மேலும் இப்படத்தில் நடிகர் விக்ரம் காட்டிய அர்ப்பணிப்பை பார்த்து தான் ஆச்சரியத்தில் ஆழ்ந்ததாகவும், படக்குழுவினர் படத்தை 120 நாட்களில் முடித்து விட்டனர் எனவும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்திருந்தார்.