
லியோவில் 'ஹெரால்டு தாஸ்' கதாபாத்திரத்தில் நடிக்க பிரித்திவிராஜ்-ஐ அணுகிய லோகேஷ்
செய்தி முன்னோட்டம்
உலகம் முழுவதும் இன்று திரையரங்குகளில் வெளியான லியோ திரைப்படத்தில், 'ஹெரால்ட் தாஸ்' கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மலையாள நடிகர் பிரித்திவிராஜை, லோகேஷ் கனகராஜ் அணுகியதாக கூறியுள்ளார்.
மலையாளத்தில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளம்வரும் பிரித்திவிராஜ், ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணிகளால் இதில் நடிக்க மறுத்து விட்டார் என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய லோகேஷ் கனகராஜ்,
பிரித்திவிராஜின் 'அய்யப்பனும் கோஷியும்', 'லூசிபர்', ' மும்பை போலீஸ்' உள்ளிட்ட படங்களில் அவரின் நடிப்பை பார்த்து தான் ஈர்க்கப்பட்டதால், அவரை லியோ திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க வைக்க விரும்பியதாகவும் கூறி இருந்தார்.கேங்ஸ்டர் கதாபாத்திரமான அதில், பின்னர் 'அர்ஜுன்' நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
லியோவை தவறவிட்ட பிரித்விராஜ்
Prithviraj was offered Harold Das character played by Arjun in #Leo
— Friday Matinee (@VRFridayMatinee) October 19, 2023