
ஹிந்தியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டில் தணிக்கை சான்று பெற்றுக்கொள்ளலாம்
செய்தி முன்னோட்டம்
ஹிந்தியில் வெளியாகும் தமிழ் திரைப்படங்களுக்கும், இனி தமிழ்நாட்டிலேயே தணிக்கை சான்று வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு முன் தமிழ் படங்களை ஹிந்தியில் வெளியிட, மும்பையில் உள்ள மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடம் செல்ல வேண்டியதாக இருந்தது.
தற்போது மாநில மொழியில் வெளியாகும் திரைப்படத்திற்கு எங்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுகிறதோ, அங்கு ஹிந்தி மொழிக்கும் தணிக்கை சான்று பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 6 மாதத்திற்கு இது பரிச்சாத்த முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன் மூலம் தெலுங்கு, மலையாளம் மொழிகளில் வெளியாகும் தமிழ் படங்களைப் போலவே, ஹிந்தியில் வெளியாகும் தமிழ் படங்களுக்கும் சென்னையில் தணிக்கை சான்று அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
2nd card
விஷாலை பாராட்டும் திரைத்துறையினர்
மத்திய அரசின் இந்த முடிவிற்கு நடிகர் விஷாலை, தமிழ் திரையுலகினர் பாராட்டி வருகின்றனர்.
நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஹிந்தியில் வெளியிட தணிக்கை சான்றிதழ் பெற, ₹4.5 லஞ்சமாக கேட்கப்பட்டதாக நடிகர் விஷால் புகார் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருந்த விஷால், பிரதமர் மோடியையும், மகாராஷ்டிரா மாநில அரசையும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
விஷாலின் இந்த புகாரை அடுத்தே, மத்திய அரசு இவ்வாறான முடிவை அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது.