#AK63 படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்?- ட்விட்டரில் வெளியிட்ட அப்டேட்
மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்து நடிகர் அஜித்தை வைத்து இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. அந்த தகவலை உறுதி செய்யும் வகையில், ஆதிக் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் கவர் புகைப்படத்தை மாற்றியுள்ளார். இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும், விடாமுயற்சி திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் அஜித், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைவதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. அஜித், 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நடித்துக் கொண்டிருந்தபோது அவரை சந்தித்து கதை சொன்னதாகவும், அஜித்திற்கு கதை பிடித்திருந்ததால் தற்போது அடுத்த கட்ட பணியில் ஆதிக் ரவிச்சந்திரன் இறங்கிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில், தனது ட்விட்டர் கவர் புகைப்படத்தை, அஜித் புகைப்படமாக ஆதிக் ரவிச்சந்திரன் மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் கவர் புகைப்படத்தில் வெளியான'AK63' திரைப்பட அப்டேட்
#Updates | 'AK63' படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என தகவல் பரவி வரும் நிலையில், தனது கவர் ஃபோட்டோவை மாற்றியுள்ளார்!#SunNews | #Ak63 | #AjithKumar | @Adhikravi pic.twitter.com/yJowK5Bkeu— Sun News (@sunnewstamil) October 20, 2023