ஃபுல் ஃப்ரேம் லென்ஸ்கள், 8k கேமராவில் படமாக்கப்பட்ட துருவ நட்சத்திரம்
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம், வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது. ட்ரெய்லரில் இடம்பெற்ற ஆக்சன் மற்றும் சேசிங் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தற்போது இந்த காட்சிகளை, ஃபுல் ஃப்ரேம் லென்ஸ் மற்றும் 8k கேமராவில் படமாக்கப்பட்டதாக, படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தெரிவித்துள்ளார். தனது ஃபுல் ஃப்ரேம் லென்ஸ் மற்றும் 8k கேமராவில் முதல்முறையாக ஒரு சினிமாவை ஒளிப்பதிவு செய்து இருப்பதாக, மனோஜ் பரமஹம்சா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களில், 7 நாடுகளில் நடந்த துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு
மேலும் திரைப்படத்திற்காக இரண்டு மாதங்களில், 7 நாடுகள் சென்று பணியாற்றி அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருந்தது எனவும், மேலும் படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனை பாராட்டிய மனோஜ், "எல்லா கஷ்டங்களையும் கடந்து எப்போதும் முன்னோக்கி செல்லும் கௌதம் மேனனின் ஆர்வம், தன்னை போன்றவர்களை சினிமாவில் வாழ வைப்பதாக பதிவிட்டிருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக இருந்த இத்திரைப்படம், பல்வேறு பிரச்சினைகளால் 7 ஆண்டுகள் வெளியாகாமல் இருந்தது குறிப்பிடப்பட்டது.