
நவம்பர் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது விக்ரம் பிரபுவின் 'ரெய்டு'
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் கார்த்தி இயக்கத்தில், நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள ரெய்டு திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக, வெள்ளைக்காரதுரை திரைப்படத்திற்கு பின் ஸ்ரீதிவ்யா இணைந்துள்ளார். ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
இந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் கடந்த ஒரு வருடமாகவே வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மட்டும் கேள்விக்குறியாக இருந்து வந்தது.
இந்நிலையில், தற்போது தீபாவளிக்கு, நடிகர் கார்த்தியின் ஜப்பான், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள்X உள்ளிட்ட படங்களுடன் இந்த படமும் வெளியாக உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
தீபாவளிக்கு வெளியாகும் 3 தமிழ் படங்கள்
High-Voltage action flick #Raid from 10th November
— Open Screen (@OpenScreenoffl) October 29, 2023
starring @iamVikramPrabhu
@SDsridivya @dir_muthaiya @dir_karthioffl @OpenScreenoffl @SamCSmusic @maran_vj @Ananthika108 @soundar4uall @RishiRithvik10 @Danielanniepope @HaricharanMusic pic.twitter.com/DViMezh71r