ஜெயிலர் வசூல் சாதனையை முறியடிக்க இருக்கும் லியோ
லியோ திரைப்படம் வெளியான 7 நாட்களுக்குள் ₹461 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி, தமிழ் சினிமாவில் 7 நாட்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம், கடந்த அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி, தற்போது வசூல் சாதனை படைத்து வருகிறது. மேலும் படம் வெளியான முதல் நாளே, உலகம் முழுவதும் ₹140 கோடிக்கு மேல் லியோ வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மட்டும் ₹64.8 கோடி வசூல் செய்திருந்தது. ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் ₹608 கோடி வசூல் செய்திருந்த நிலையில், இந்த சாதனையை 'லியோ' முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.