Page Loader
#1YearOfLoveToday- மீண்டும் திரைக்கு வரும் லவ் டுடே
நாளை மீண்டும் திரையரங்குகளில் லவ் டுடே வெளியாகிறது.

#1YearOfLoveToday- மீண்டும் திரைக்கு வரும் லவ் டுடே

எழுதியவர் Srinath r
Nov 03, 2023
02:46 pm

செய்தி முன்னோட்டம்

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நாளையுடன் ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு, மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவியின் கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், 90ஸ் கிட்ஸ் வாழ்க்கையை அப்படத்தில் கதையாக அமைத்திருந்தார். பின்னர் தான் இயக்கும் இரண்டாவது படத்தில், அவரே நடிக்கவும் செய்தார். தற்கால காதல், காதலர்களுக்குள் எழும் சண்டை உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்டு லவ் டுடே திரைப்படத்தை உருவாக்கினார். காதலர்களான இவானாவும், பிரதீப்பும் அவரது தந்தை சத்யராஜ் அறிவுறுத்தலின் பேரில் தங்களது செல்போன்களை மாற்றிக் கொள்கிறார்கள். அதன்பின் அவர்களுக்குள் எழும் சண்டையும், ஏற்படும் சமாதானமும் திரைப்படத்தின் மீதி கதை.

2nd card

வசூலை குவித்த லவ் டுடே

படத்தில் இடம்பெற்று இருந்த யோகி பாபு, ராதிகா உள்ளிட்டவர்களின் காட்சிகள் படத்திற்கு வலு சேர்த்தது. யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தின் பாடல்களை ரசிகர்களை இன்னும் முணுமுணுக்க வைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த வருடம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது லவ் டுடே. மேலும் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் பல மடங்கு அதிக லாபத்தையும் குவித்தது. இத்திரைப்படம் ₹70 கோடி வரையில் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைவதையொட்டி, நாளை ஏஜிஎஸ் திரையரங்குகளில் இத்திரைப்படம் மீண்டும் வெளியாகும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன் அவர்கள் கொண்டாடி தீர்த்த திரைப்படம் மீண்டும் திரைக்கு வருவதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றார்.

ட்விட்டர் அஞ்சல்

நாளை மீண்டும் திரையரங்குகளில் லவ் டுடே