Page Loader
'தளபதி 68' பூஜை வீடியோ வெளியானது
படத்தின் பூஜை விழாவில், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் அவரது தந்தை கங்கை அமரன் உடன் நடிகர் விஜய்.

'தளபதி 68' பூஜை வீடியோ வெளியானது

எழுதியவர் Srinath r
Oct 24, 2023
12:22 pm

செய்தி முன்னோட்டம்

லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு பின், நடிகர் விஜய் தனது 68வது திரைப்படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், பிரசாந்த், யோகி பாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், மலையாள நடிகர் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை வீடியோ இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்த நிலையில், தற்போது படக்குழு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. வெங்கட் பிரபுவுடன், விஜய் முதல் முறையாக இணைவது, படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளம் இருப்பது உள்ளிட்டவை படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

நட்சத்திர பட்டாளத்துடன் கலைகட்டிய #தளபதி68 பூஜை