
ரஜினி கமல் இணைந்து நடிக்கிறார்களா? கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், SJ சூர்யா, ராகவா லாரன்ஸை வைத்து ஜிகர்தண்டா டபுள்X என்ற படத்தை இயக்கியுள்ளார்.
சித்தா படத்தில் நடித்த நிமிஷா சஜயன் இப்படத்தில் நடித்துள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனையொட்டி ராகவா லாரன்ஸாக ரஜினி இருப்பது போன்றும், எஸ்ஜே சூர்யாவாக கமல் இருப்பது போன்ற படத்தின் எடிட் செய்யப்பட்ட போஸ்டரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சில தசாப்தங்களுக்கு முன்னால் தான் பிறந்திருந்தால், ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தை, தலைவர் மற்றும் உலக நாயகனை வைத்து இயக்கியிருப்பேன் என உதவி இயக்குனர்கள் குழுவிடம் சொன்னதாகவும், அதை அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டதாகவும் பதிவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
ரஜினி கமல் இருக்கும் ஜிகர்தண்டா டபுள்X படத்தின் புகைப்படத்தை பகிர்ந்த கார்த்திக் சுப்புராஜ்
I kept Dreaming to my AD team that if i was born decades earlier i would have made... #JigarthandaDoubleX with Thalaivar & UlagaNayagan......
— karthik subbaraj (@karthiksubbaraj) November 8, 2023
My associate director @mahesbalu17 took that seriously..... 🤗❤️ #DoubleXDiwali in Two days....#JigarthandaDoubleXfromNov10 pic.twitter.com/1kOofPUy77