துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் விக்ரம் கூட்டணியில் 7 ஆண்டுகளாக திரைக்கு வர காத்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படம், 2018 ஆம் ஆண்டு திரையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதன் பின் எழுந்த பல்வேறு பிரச்சினைகளால் படம் வெளியாவது தள்ளிப்போனது. இத்திரைப்படத்தில் விக்ரமுடன், சிம்ரன், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில், இத்திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு அண்மையில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியானது. அமெரிக்கா, பல்கேரியா உள்ளிட்ட ஏழு நாடுகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.