Page Loader
மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தின் வசனகர்த்தா ராசீ தங்கதுரை காலமானார்
ராசீ தங்கதுரை.

மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தின் வசனகர்த்தா ராசீ தங்கதுரை காலமானார்

எழுதியவர் Srinath r
Nov 13, 2023
04:26 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் பிரபல வசனகர்த்தா ராசீ தங்கதுரை என்கிற தாமஸ் உடல் நலக்குறைவால், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே காலமானார். அவருக்கு வயது 53. கடந்த இரண்டு வருடங்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்த ராசீ தங்கதுரை, தனது சொந்த கிராமமான கதிர்நரசிங்கபுர இல்லத்தில் இன்று உயிரிழந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு, இயக்குனர் லெனின் பாரதி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற, மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்திற்கு ராசீ தங்கதுரை வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தேன் திரைப்படத்திற்கும் வசனம் எழுதிய தங்கதுரை, அப்படத்தில் மருத்துவர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அவர் சொந்த ஊரான தேனி மண் சார்ந்த பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

தங்கதுரைக்கு இரங்கல் தெரிவித்த நடிகர் சுலைல் குமார்