Page Loader
சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது- கார்த்தி வெளியிட்ட அப்டேட்
இயக்குனர் பிஎஸ் மித்ரன் இரும்புத்திரை, ஹீரோ என தனித்துவமான கதை அம்சங்கள் கொண்ட படங்களை தொடர்ந்து இயக்கி வருகிறார்.

சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது- கார்த்தி வெளியிட்ட அப்டேட்

எழுதியவர் Srinath r
Oct 21, 2023
03:59 pm

செய்தி முன்னோட்டம்

சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குநர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில், நடிகர்கள் கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இத்திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சர்தார் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அத்துடன் சர்தார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

விரைவில் வெளியாகுமா சர்தார் 2?