
சிங்கள இயக்குனரின் படத்தை வெளியிடும் மணிரத்தினம்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்தினம், சிங்கள இயக்குனரான பிரசன்ன விதானகே இயக்கிய 'பேரடைஸ்' என்ற திரைப்படத்தை தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் திரைக்கு கொண்டுவருகிறார். சிங்கள சினிமாவில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறும் படங்களை தொடர்ந்து இயக்கி வருபவர், பிரசன்ன விதானகே. இவர் தற்போது ரோஷன் மேத்யூ, தர்ஷனா, ஷியாம் பெர்ணாண்டோ ஆகியோரை வைத்து பேரடைஸ் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். போருக்குப் பின், கடும் பொருளாதார வீழ்ச்சியால் தக்கி தவிக்கும் இலங்கைக்கு, சுற்றுலா வரும் தம்பதிகளை பற்றியது இத்திரைப்படத்தின் கதை என கூறப்படுகிறது. நியூட்டன் சினிமாஸ் என்ற தமிழ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து உள்ள இத்திரைப்படத்தை, மணிரத்தினம் தனது நிறுவனம் மூலம் திரைக்கு கொண்டு வருகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
பூசன் சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்ற 'பேரடைஸ்'
Thrilled to share some of Paradise's winning moments from Busan International Film Festival! 🌟🎬 #Paradise #BIFF2023https://t.co/NOvthsXZXS@prasannavith @roshanmathew22 @darshanarajend @NewtonCinema @MadrasTalkies_
— Newton Cinema (@NewtonCinema) October 15, 2023