ஆட்டோ செய்தி

ஆட்டோமொபைல் துறையைப் பற்றிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது - வாகன வெளியீடுகள், அவற்றின் விலைகள் புதிய விதிகள் வரை.

ரூ.33 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது 'BMW M 1000 R' பைக்

இந்தியாவில் தங்களுடைய புதிய விலையுயர்ந்த ப்ரீமியம் பைக் மாடலான 'M 1000 R' பைக்கை வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. என்னென்ன வசதிகளுடன், என்ன விலையில் வெளியாகியிருக்கிறது இந்தப் புதிய பிஎம்டபிள்யூ M 1000 R?

மூன்றாம் தரப்பு வாகனக் காப்பீடு என்றால் என்ன? வாகனக் காப்பீடு ஏன் அவசியம்?

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வைத்திருப்பவர்கள் முக்கியமாக வைத்திருக்க வேண்டிய மூன்று ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம், வாகனத்திற்கான ஆவணம் மற்றும் வாகனக் காப்பீடு. ஓட்டுநர் உரிமத்தையும், வாகனத்திற்கான ஆவணங்களையும் அனைவரும் சரியாகவும் கவனமாகவும் வைத்திருப்பார்கள்.

05 Oct 2023

எஸ்யூவி

புதிய 'C3 ஏர்கிராஸ்' எஸ்யூவியின் விலை விபரங்களை வெளியிட்ட சிட்ரன்

கடந்த செப்டம்பர் 15ம் தேதியன்று இந்தியாவில் புதிய C3 ஏர்கிராஸ் எஸ்யூவி அறிமுகப்படுத்தியது சிட்ரன். ஹூண்டாய் கிரெட்டாவுடன் போட்டியிடும் இந்தப் புதிய மாடலை யூ, பிளஸ் மற்றும் மேக்ஸ் என மூன்று வேரியன்ட்களாக விற்பனை செய்யவிருக்கிறது அந்நிறுவனம்.

எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க சீன நிறுவனமான SAICயுடன் கைகோர்க்கும் இந்திய JSW குழுமம்

இந்தியாவைச் சேர்ந்த வணிகக் குழுமமான JSW குழுமமானது, சீனாவைச் சேர்ந்த SAIC மோட்டார் நிறுவனத்தின் கீழ் இந்தியாவில் இயங்கி வரும் எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் குறிப்பிட்ட அளவு பங்குகளைக் கையகப்படுத்தவிருக்கிறது.

இந்தியாவில் வெளியானது '2024 ட்ரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 1200'

இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட 2024 ஸ்கிராம்ப்ளர் 1200 மாடல் ப்ரீமியம் பைக்கை வெளியிட்டிருக்கிறது ட்ரையம்ப். முன்ப விற்பனையில் இருந்த XC வேரியன்டுக்கு மாற்றாக X வேரியன்டையும், அப்டேட் செய்யப்பட்ட டாப்-எண்டு XE வேரியன்டையும் வெளியிட்டிருக்கிறது ட்ரையம்ப்.

சஃபாரி மற்றும் ஹேரியர் ஃபேஸ்லிஃப்ட்களின் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு சஃபாரி மற்றும் ஹேரியர் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களை அடுத்த சில வாரங்களில் வெளியிடவிருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இந்த இரண்டு மாடல்களை கடந்த சில மாதங்களாகவே இந்திய சாலைகளில் சோதனை செய்து வந்தது டாடா.

குளோபல் NCAP சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்ற ஹூண்டாய் வெர்னா

குளோபல் NCAP பாதுகாப்புக் கட்டுப்பாட்டு சோதனையில் 5 ஸ்டார்களைப் பெற்று அசத்தியிருக்கிறது ஹூண்டாய் வெர்னா. மேலும், 5 ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்ற ஹூண்டாய் முதல் இந்திய தயாரிப்புக் கார் என்ற பெயரையும் பெற்றிருக்கிறது இந்த வெர்னா.

03 Oct 2023

ஹோண்டா

சிட்டி எலிகண்ட் எடிஷன் மற்றும் அமேஸ் எலைட் எடிஷனை வெளியிட்டுள்ளது ஹோண்டா

இந்தியாவில் செடான்களின் ராஜாவாகத் திகழும் 'சிட்டி' மாடலின் எலிகண்ட் எடிஷன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. விழாக் காலத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த எலிகண்ட் எடிஷனில் என்னென்ன கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன, பார்க்கலாம்.

இந்தியாவில் உயர்ந்த பயணிகள் வாகன மொத்த விற்பனை அளவு

இந்தியாவின் பயணிகள் வாகனத்தின் மொத்த விற்பனை அளவானது கடந்த செப்டம்பர் மாதம் மிக அதிக அளவை எட்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக, ஆகஸ்ட் மாதம் 3,60,700 வாகனங்கள் மொத்த விற்பனையாக அனுப்பப்பட்ட நிலையில், செப்டம்பரில் அது இன்னும் அதிரித்து 3,63,733 ஆக அதிகரித்திருக்கிறது.

02 Oct 2023

பஜாஜ்

ரூ.1.17 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது 'பஜாஜ் பல்சர் N150'

இந்தியாவில் தொடக்க நிலை ப்ரீமியம் பைக் பிரிவில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற பைக்குகளுள் ஒன்று பல்சர். இளைஞர்களைக் கவர்ந்த பல்சரை, பல்வேறு தரப்பினர்களுக்கும், பல்வேறு பயன்பாடுகளுக்கும் ஏற்ற வகையில் 11 மாடல்களாக விற்பனை செய்து வருகிறது பஜாஜ்.

2030க்குள் 8 புதிய எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் களமிறக்க ஜாகுவார் லேண்ட் ரோவர் முடிவு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் எட்டு பேட்டரி அடிப்படையிலான எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

ரூ.4.59 கோடி விலையில் இந்தியாவில் வெளியானது ஆஸ்டன் மார்டின் DB12 சொகுசு கார்

இந்தியாவில் தங்களுடைய விலைமதிப்புமிக்க 'DB12' சூப்பர் டூரர் மாடலை வெளியிட்டிருக்கிறது பிரிட்டனைச் சேர்ந்த லக்சரி ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஆஸ்டன் மார்டின். நான்கு மாதங்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் இந்தக் காரை அந்நிறுவனம் வெளியிட்டது.

30 Sep 2023

ஹோண்டா

இந்தியாவில் வெளியானது ஹோண்டாவின் 'கோல்டு விங் டூர்' லக்சரி பைக் 

இந்தியாவில் அப்டேட் செய்யப்பட்ட கோல்டு விங் டூரர் லக்சரி பைக்கை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. இந்தப் புதிய மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவில் தற்போது தொடங்கியிருக்கின்றன.

டெட்ராய்டு ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது உலகின் முதல் பறக்கும் கார்

உலகின் முதல் பறக்கும் காரின் மாதிரியை அமெரிக்காவில் நடைபெற்று வரும் டெட்ராய்டு ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தியிருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த 'அலெஃப் ஏரோநாட்டிக்ஸ்' நிறுவனம்.

29 Sep 2023

ஜாவா

சிறிய அப்டேட்களைப் பெற்ற ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்குகள்

இந்தியாவில் விற்பனையாகி வரும் ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் ஆகிய மாடல்களின் அப்டேட் செய்யப்பட்ட புதிய வெர்ஷன்களை வெளியிட்டிருக்கிறது ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள் நிறுவனம்.

இந்தியாவில் கால் பதிக்கும் வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோமொபைல் நிறுவனம்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் கால்பதிக்கத் திட்டமிட்டு வருகிறது வியட்நாமைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் (VinFast). இந்தியாவில் டெஸ்லாவிற்குப் போட்டியாக தடம் பதிக்கத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.

இந்தியாவில் வெளியானது புதிய மெர்சிடீஸ் AMG G 63 கிராண்டு எடிஷன் 

இந்தியாவில் தாங்கள் ஏற்கனவே விற்பனை செய்து வரும் AMG G 63 மாடலின் கிராண்டு எடிஷனை தற்போது வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். மொத்தமாக 1000 AMG G 63 கிராண்டு எடிஷன் கார்களையே தயாரித்து விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

28 Sep 2023

கார்

இந்தியாவில் மூன்றாவது தொழிற்சாலையை கட்டமைக்கத் திட்டமிட்டு வரும் டொயோட்டா

இந்தியாவில் புதிய கார் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றைக் கட்டமைக்கத் திட்டமிட்டு வருகிறது ஜப்பானை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா. ஏற்கனவே, இந்தியாவின் பிடாடி மற்றும் கர்நாடகாவில் இரண்டு டொயோட்டா தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

இந்தியாவில் 200சிசி பிரிவில் புதிய பைக்கை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஹார்லி டேவிட்சன்

இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் தங்களது விலை குறைந்த 'X440' பைக்கை வெளியிட்டது ஹார்லி-டேவிட்சன். அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, ரூ.2.29 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது ஹா்ரலி டேவிட்சனின் X440 பைக் மாடல்.

25 Sep 2023

கியா

இந்தியாவில் செல்டோஸ் மற்றும் கேரன்ஸின் விலையை உயர்த்தும் கியா

இந்தியாவில் விற்பனையாகி வரும் தங்களுடைய செல்டோஸ் எஸ்யூவி மற்றும் கேரன்ஸ் எம்பிவி மாடல்களின் விலையை உயர்த்தியிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது தென்கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா.

24 Sep 2023

யமஹா

MotoGP நிகழ்வில் YZF-R3 பைக்கை காட்சிப்படுத்திய யமஹா

இந்தியாவில் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் 400சிசிக்கு உட்பட்ட இன்ஜினைக் கொண்ட YZF-R3 பைக்கை, இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் நடைபெற்று வரும் முதல் மோடோஜிபி பந்தய நிகழ்வில் காட்சிப்படுத்தியிருக்கிறது யமஹா.

சுமாரான விற்பனையைத் தொடர்ந்து ஹெக்டர் மாடல்களின் விலையைக் குறைத்த எம்ஜி மோட்டார்

இந்தியாவில் அஸ்டர், ஹெக்டர் மற்றும் கிளாஸ்டர் என மூன்று எரிபொருள் இன்ஜின் கொண்ட கார்களை விற்பனை செய்து வருகிறது எம்ஜி மோட்டார் நிறுவனம்.

ஷாட்கன் 650 மாடலுக்கு ARAI அமைப்பிடம் அனுமதி பெற்றிருக்கிறது ராயல் என்ஃபீல்டு

இந்த மாதத் தொடக்கத்தில் புதிய இன்ஜினைக் கொண்டு அப்டேட் செய்யப்பட்ட புதிய புல்லட் 350 மாடலை அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். அதனைத் தொடர்ந்து, 450சிசி மற்றும் 650சிசி இன்ஜின்களைக் கொண்ட இரண்டு பைக்குகளை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

இந்தியாவில் வெளியானது ஹூண்டாயின் 'i20 N லைன் ஃபேஸ்லிஃப்ட்' மாடல்

இந்தியாவில் விற்பனையாகி வந்த தங்களுடைய 'i20 N லைன்' ஹேட்ச்பேக் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய் நிறுவனம். என்னென்ன மாற்றங்களுடன் வெளியாகியிருக்கிறது i20 N லைன் ஃபேஸ்லிஃப்ட்?

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக் ரேஸிங் சாம்பியன்ஷிப் தொடங்குவதாக டிவிஎஸ் நிறுவனம் அறிவிப்பு

இரு சக்கர வாகன விற்பனையாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இந்தியாவின் முதல் ஒன் மேக் எலக்ட்ரிக் பைக் ரேஸிங் சாம்பியன்ஷிப்பை (இ-ஓஎம்சி) தொடங்குவதாக அறிவித்துள்ளது.

2023ம் ஆண்டிற்கான அப்டேட் செய்யப்பட்ட ஸ்கிராம்ப்ளர் ரேஞ்சை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது டுகாட்டி

இந்தியாவில் 2023ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட அடுத்த தலைமுறை ஸ்கிராம்ப்ளர் ரேஞ்சை வெளியிட்டிருக்கிறது டுகாட்டி. இந்த அப்டேட் செய்யப்பட்ட ஸ்கிராம்ப்ளரை ஐகான், ஃபுல் த்ராட்டில் மற்றும் நைட்ஷிப்ட் என மூன்று வேரியன்ட்களாக வெளியிட்டிருக்கிறது டுகாட்டி.

அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை உருவாக்கி வரும் ஹூண்டாய்

இந்தியாவில் விற்பனையாகி வரும் மூன்று வரிசை சீட்கள் கொண்ட அல்கஸார் எஸ்யூவி மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் ஒன்றை ஹூண்டாய் உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

புதிய ஃபேஸ்லிஃப்டட் ஜீப்புக்கு மாற்றாக இந்தியாவில் விற்பனையாகி வரும் கார்கள்

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் தங்களுடைய காம்பஸ் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜீப் நிறுவனம். புதிய ஃபேஸ்லிஃப்டில் 2 வீல் டிரைவ் டீசல் ஆட்டோமேட்டிக் கான்பிகரேஷனிலும் விற்பனைக்கு வந்திருக்கிறது ஜீப்.

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் சிறந்த டீசல் கார்கள்!

ஆட்டோமொபைல் துறை கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு மாறி வந்தாலும், வாடிக்கையாளர்களின் ஃபேவரைட் எப்போதும் டீசல் இன்ஜின் கொண்ட வாகனங்கள் தான்.

18 Sep 2023

ஆடி

இந்தியாவில் Q5 எஸ்யூவியின் லிமிடட் எடிஷன் மாடலை வெளியிட்டுள்ளது ஆடி

ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் Q5 எஸ்யூவி மாடலின் லிமிடட் எடிஷன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

சிறப்பான ஆடியோ அனுபவத்தை அளிக்க டால்பியுடன் கைகோர்க்கும் மஹிந்திரா

இந்தியாவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, தங்களுடைய எலெக்ட்ரிக் கார்களில் சிறப்பான ஆடியோ அனுபவத்தை அளிப்பதற்காக டால்பி அட்மாஸ் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது.

ஏன் அதிக விலையைக் கொண்டிருக்கின்றன எலெக்ட்ரிக் கார்கள்?

முதலில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு தயக்கம் காட்டிய உலகம், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. எலெக்ட்ரிக் வாகன தொழிற்துறை மற்றும் எலெக்ட்ரிக் வாகன கட்டமைப்பின் வளர்ச்சியும் இதற்கு ஒரு காரணமாகக் கூறலாம்.

16 Sep 2023

ஹோண்டா

இந்தியாவில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹோண்டா CB200X பைக்

இந்தியாவில் விற்பனையாகி வரும் CB200X பைக்கின், 2023ம் ஆண்டிற்கான அப்டேட்டட் வெர்ஷனை தற்போது வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.

இந்தியாவில் வெளியானது புதிய சிட்ரன் 'C3 ஏர்கிராஸ்' எஸ்யூவி

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'C3 ஏர்கிராஸ்' எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது சிட்ரன். இந்தப் புதிய எஸ்யூவிக்கான முன்பதிவை ரூ.25,000 செலுத்தி, சிட்ரன் ஷோரூம்களிலோ அல்லது சிட்ரனின் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்திலோ மேற்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

இந்தியாவில் புதிய EQE 500 எலெக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிட்டது மெர்சிடீஸ்

இந்தியாவில் தங்களுடைய மூன்றாவது எலெக்ட்ரிக் மாடலாக EQE 500 எஸ்யூவியை வெளியிட்டிருக்கிறது மெர்சிடீஸ்-பென்ஸ் நிறுவனம். ஏற்கனவே, EQS செடான் மற்ரும் EQB எஸ்யூவி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் வெளியானது டாடாவின் புதிய 'நெக்ஸான்' மற்றும் 'நெக்ஸான்.ev' ஃபேஸ்லிஃப்ட்கள்

இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட புதிய நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட்டிருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். 2020ம் ஆண்டு நெக்ஸானின் முதல் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட்டது டாடா. தற்போது அதனைத் தொடர்ந்து இறண்டாவது ஃபேஸ்லிஃப்டை வெளியிட்டிருக்கிறது.

கார்களில் ஆறு ஏர்பேக்குகள் கட்டாயமில்லையா? என்ன கூறினார் நிதின் கட்கரி?

இந்தியாவில் பயணிகளின் பாதுகாப்பை மனதில் கொண்டு பல்வேறு பாதுகாப்பு மேற்றும் மேம்பாட்டு அறிவிப்புகள் மற்றும் உத்தரவுகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிடுவது வழக்கம்.

2024ம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறதா ஹூண்டாயின் கோனா எலெக்ட்ரிக்?

ஹூண்டாய் மேம்படுத்தி வரும் இரண்டாம் தலைமுறை கோனா எலெக்ட்ரிக் கார் மாடலை 2024ம் ஆண்டே இந்தியாவில் வெளியிட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

'அஸூரா' என்ற பெயரை டிரேடுமார்க்கிற்குப் பதிவு செய்த டாடா மோட்டார்ஸ்

இந்தியாவில் அஸூரா (Azura) என்ற பெயரை டிரேடுமார்க்கிற்காகப் பதிவு செய்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். இந்தப் புதிய டிரேடுமார்க் பெயரானது, அந்நிறுவனம் இந்தாண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்திய கர்வ் கான்செப்ட் மாடலின் தயாரிப்பு வடிவமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் வெளியானது புதிய 'BMW 6 சீரிஸ் GT M ஸ்போர்ட் சிக்னேச்சர்' 

இந்தியாவில் விற்பனையாகி வரும் 6 சீரிஸ் கிராண்டு டுரிஸ்மோவின் புதிய வேரியன்ட் ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறது பிஎம்டபிள்யூ. ஒரே ஒரு இன்ஜின் தேர்வுடனும், சில புதிய வசதிகளுடனும் வெளியாகியிருக்கிறது '6 சீரிஸ் GT M ஸ்போர்ட் சிக்னேச்சர்'.