இந்தியாவில் விற்பனையில் இருக்கும் சிறந்த டீசல் கார்கள்!
செய்தி முன்னோட்டம்
ஆட்டோமொபைல் துறை கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு மாறி வந்தாலும், வாடிக்கையாளர்களின் ஃபேவரைட் எப்போதும் டீசல் இன்ஜின் கொண்ட வாகனங்கள் தான்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்படும் மாசுக்காட்டுப்பாட்டு விதிமுறைகளின் காரணமாக, டீசல் இன்ஜின் கொண்ட வாகனங்களின் உற்பத்தியையே நிறுத்தி வருகின்றன ஆட்டோமொபைல் நிறுனங்கள்.
தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் சிறந்த டீசல் கார்களின் லிஸ்ட் இது.
டாடா அல்ட்ராஸ்:
விலை: 8.80-10.74 லட்சம்
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகக் குறைவான டீசல் வாகனம் என்றால் அது டாடா அல்ட்ராஸ் தான். 90hp பவரை உற்பத்தி செய்யக்கூடிய, 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட 1.5-லிட்டர் டீசல் இன்ஜினைப் பெற்றிருக்கிறது அல்ட்ராஸ்.
ஆட்டோ
மஹிந்திரா பொலேரோ/ பொலேரோ நியோ
விலை: ரூ.9.63 லட்சம் முதல் ரூ.12.14 லட்சம் வரை
76hp பவரை வெளிப்படுத்தக்கூடிய மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை பொலேரோவும், 100hp பவரை வெளிப்படுத்தக்கூடிய மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை பொலேரோ நியோவும் பெற்றிருக்கின்றன.
மஹிந்திரா எக்ஸ்யூவி 300:
விலை: ரூ.9.90 லட்சம் முதல் ரூ.14.60 லட்சம்
இந்திய கார் உற்பத்தியாளரான மஹிந்திராவின் மற்றொரு டீசல் இன்ஜின் கொண்ட மாடல் எக்ஸ்யூவி 300. இந்த மாடலில் 117hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜினைக் கொடுத்திருக்கிறது மஹிந்திரா. ஆட்டோமேட்டி மற்றும் மேனுவல் என இரண்டு வகையான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடனும் இந்த எக்ஸ்யூவி 300ஐ இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது மஹிந்திரா.
ஆட்டோ
கியா சோனெட்:
விலை: ரூ.9.95 லட்சம் முதல் ரூ.14.89 லட்சம்
தென்கொரிய கார் தயாரிப்பாளரான கியா இந்தியாவில் விற்பனை செய்து வரும் டீசல் இன்ஜின் கொண்ட கார்களுள் ஒன்றாக இருக்கிறது சோனெட். இந்த மாடலில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது கியா. இந்த மாடலில் சாதாரண மேனுவல் கியர்பாக்ஸாக இல்லாமல், iMT கியர்பாக்ஸூம், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும் அளித்திருக்கிறது கியா.
டாடா நெக்ஸான்:
விலை: ரூ.11.00 லட்சம் முதல் 15.50 லட்சம்
அல்ட்ராஸூக்கு அடுத்தபடியாக இந்திய டாடா லைன்அப்பில் இருக்கும் மற்றொரு டீசல் கார் இந்த நெக்ஸான். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களைக் கொண்டிருக்கும் இந்த மாடலில், 115hp பவர் மற்றும் 260Nm டார்க்கை உற்பத்தி செய்யும் இன்ஜினைக் கொண்டிருக்கிறது நெக்ஸான்.