இந்தியாவில் வெளியானது அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹோண்டா CB200X பைக்
இந்தியாவில் விற்பனையாகி வரும் CB200X பைக்கின், 2023ம் ஆண்டிற்கான அப்டேட்டட் வெர்ஷனை தற்போது வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. புதிய அப்டேட்டட் CB200X மாடலில், சில டிசைன் மாற்றங்களுடன், BS6 இரண்டாம் நிலை மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட இன்ஜினோடு, OBD2 சாதனத்தையும் கொடுத்திருக்கிறது ஹோண்டா. இந்தியாவில் இயங்கி வரும் ஹோண்டா ரெட் விங் டீலர்ஷிப்கள் மூலம், புதிய அப்டேட் செய்யப்பட்ட CB200X பைக்கை வாங்கிக் கொள்ள முடியும். ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் சுஸூகி V ஸ்ட்ராம் SX 250 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த CB200X ஆனது ப்ளூ மெட்டாலிக், நைட்ஸ்டர் பிளாக் மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் ஆகிய நிறங்களில் விற்பனை செய்யப்படவிருக்கிறது.
2023 ஹோண்டா CB200X: இன்ஜின் மற்றும் விலை
புதிய 2023 ஹோண்டா CB200X பைக்கில், 17.03hp பவர் மற்றும் 15.9Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் சிங்கிள் சிலிண்டர் கொண்ட, 184.40சிசி இன்ஜினைக் கொடுத்திருக்கிறது ஹோண்டா. எல்இடி லைட்டிங், முன்பக்க USD ஃபோர்க், பின்பக்க மோனோஷாக் சஸ்பென்ஷன்கள் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆகிய வசதிகளுடன், புதிய அப்டேட்டட் பைக்கில் ஸ்லிப் அண்ட் அசிஸ்ட் கிளட்ச் வசதியையும் அளித்திருக்கிறது ஹோண்டா. 167மிமீ கிரௌண்டு கிளியரன்ஸைக் கொண்டிருக்கும் இந்த CB200X பைக்கை இந்தியாவில், ரூ1.47 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிட்டிருக்கிறது ஹோண்டா.