
இந்தியாவில் வெளியானது ஹூண்டாயின் 'i20 N லைன் ஃபேஸ்லிஃப்ட்' மாடல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் விற்பனையாகி வந்த தங்களுடைய 'i20 N லைன்' ஹேட்ச்பேக் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது ஹூண்டாய் நிறுவனம். என்னென்ன மாற்றங்களுடன் வெளியாகியிருக்கிறது i20 N லைன் ஃபேஸ்லிஃப்ட்?
புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கிரில்கள், புதிய எல்இடி முகப்புவிளக்குகள், தனித்துவமான எல்இடி DRL-களைக் கொடுத்திருக்கிறது ஹூண்டாய். இதற்கான டிசைன் இன்ஸ்பிரேஷனை, சமீபத்தில் வெளியான i20 ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் இருந்து பெற்றிருக்கிறது அந்நிறுவனம்.
வெளிப்பக்கம் அக்ரஸிவ்வான தோற்றத்தைக் கொடுக்க பம்பர்களை மறுவடிவமைப்பு செய்திருப்பதோடு, உட்பக்கம் கருப்பு நிறத்திலான இன்டீரியரைக் கொடுத்திருக்கிறது ஹூண்டாய். மேலும், இந்த ஃபேஸ்லிஃப்டோடு புதிய அபிஸ் ப்ளாக் நிறத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
ஹூண்டாய்
ஹூண்டாய் i20 N லைன் ஃபேஸ்லிஃப்ட்: இன்ஜின் மற்றும் விலை
புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனிலும் வழக்கம் போல், 118hp பவர் மற்றும் 172Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, 1.0 லிட்டர் கப்பா டர்போ GDi பெட்ரோல் இன்ஜினைக் கொடுத்திருக்கிறது ஹூண்டாய்.
மேலும், இந்த இன்ஜினானது 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
இந்த இன்ஜினுடன், முன்னர் பயன்பாட்டை நிறுத்திய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினையும், புதிய i20 N லைன் ஃபேஸ்லிஃப்டில் வழங்கியிருக்கிறது ஹூண்டாய்.
மேற்கூறிய மாற்றங்களுடன் இந்தியாவில், ரூ.9.99 லட்சம் முதல் ரூ.12.32 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் வெளியாகியிருக்கிறது புதிய ஹூண்டாய் i20 N லைன் ஃபேஸ்லிஃப்ட்.