
MotoGP நிகழ்வில் YZF-R3 பைக்கை காட்சிப்படுத்திய யமஹா
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் 400சிசிக்கு உட்பட்ட இன்ஜினைக் கொண்ட YZF-R3 பைக்கை, இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் நடைபெற்று வரும் முதல் மோடோஜிபி பந்தய நிகழ்வில் காட்சிப்படுத்தியிருக்கிறது யமஹா.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விற்பனையில் இருந்த இந்த பைக்கின் விற்பனையை, இந்தியாவில் கொண்டுவரப்பட்ட மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு பின்பு நிறுத்தியது யமஹா.
இந்த பைக்கை மீண்டும் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர யமஹா திட்டமிட்டிருக்கும் நிலையில், தற்போது மோடோஜிபி பந்தைய நிகழ்வில் அதனை காட்சிப்படுத்தியிருக்கிறது.
மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பெர்ஃபாமன்ஸூடன் இந்தப் புதிய அப்டேட் செய்யப்பட்ட YZF-R3 பைக்கை இந்தியாவில் யமஹா வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யமஹா
யமஹா YZF-R3: இன்ஜின் மற்றும் வெளியீடு
தங்களுடைய ப்ரீமியம் பைக்கான R7-ல் இருந்து டிசைன்களை கடன் வாங்கி, புதிய R3-யில் பயன்படுத்தியிருக்கிறது யமஹா.
மேலும், புதிய பைக்கில் 40.4hp பவர் மற்றும் 29.4Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 321சிசி, லிக்விட்-கூல்டு, பேரலல்-ட்வின் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது யமஹா. ரூ.3.5 லட்சம் விலையில் இந்த பைக்கானது இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த YZF-R3 உடன், Mt-03 மாடலையும் இந்தியாவில் யமஹா அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி, அந்த மாடலுக்கு இளைஞர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Mt-03யின் சிறிய இன்ஜின் கொண்ட மாடலான Mt-15 பைக் மாடலானது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வெளியாகி இளைஞர்களிடையே பலத்த வரேவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இரண்டு பைக்குகளையும் வரும் டிசம்பரில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது யமஹா.