ரூ.1.17 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியானது 'பஜாஜ் பல்சர் N150'
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தொடக்க நிலை ப்ரீமியம் பைக் பிரிவில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற பைக்குகளுள் ஒன்று பல்சர். இளைஞர்களைக் கவர்ந்த பல்சரை, பல்வேறு தரப்பினர்களுக்கும், பல்வேறு பயன்பாடுகளுக்கும் ஏற்ற வகையில் 11 மாடல்களாக விற்பனை செய்து வருகிறது பஜாஜ்.
இந்தியாவில் விற்பனையாகி வரும் மிக நீண்ட பஜாஜின் பல்சர் லைன்அப்பில் புதிதாக இணைந்திருக்கிறது 'பல்சர் N150' மாடல். பல்சர் N160 மாடலின் உடலலையும், பல்சர் P150 மாடலின் இதயைத்தையும் ஒன்றினைத்து இந்த பல்சர் N150 மாடலை உருவாக்கியிருக்கிறது பஜாஜ்.
முன்பக்கம் டெலஸ்கோபிக் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன்களைப் பயன்படுத்தியிருக்கிறது பஜாஜ். மேலும், பாதுகாப்பிற்காக முன்பக்கம் டிஸ்க் பிரேக்கும், பின்பக்கம் டிரம் பிரேக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
பஜாஜ்
பஜாஜ் பல்சர் N150: இன்ஜின் மற்றும் விலை
புதிய N150 மாடலின் டிசைன் முழுவதையும், N160 மாடலை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கியிருக்கிறது பஜாஜ். மேலும், புதிய மாடலில், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் P150 மாடலின் 149.68சிசி இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம்.
இந்த இன்ஜினானது, 14.3hp பவரையும், 13.5Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த இன்ஜினை 5-ஸ்பீடு கியர்பாக்ஸூடன் இணைத்திருக்கிறது பஜாஜ்.
சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் தேர்வுகளுடன் ஒரே ஒரு வேரியன்டில் மட்டுமே வெளியாகியிருக்கும் இந்த பல்சர் N150 பைக்கை, இந்தியாவில் ரூ.1.17 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யவிருக்கிறது பஜாஜ்.