
இந்தியாவில் வெளியானது புதிய சிட்ரன் 'C3 ஏர்கிராஸ்' எஸ்யூவி
செய்தி முன்னோட்டம்
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 'C3 ஏர்கிராஸ்' எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது சிட்ரன். இந்தப் புதிய எஸ்யூவிக்கான முன்பதிவை ரூ.25,000 செலுத்தி, சிட்ரன் ஷோரூம்களிலோ அல்லது சிட்ரனின் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்திலோ மேற்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது அந்நிறுவனம்.
மேலும், அக்டோபர் 15ம் தேதியிலிருந்து புதிய C3 ஏர்கிராஸ் எஸ்யூவியின் டெலிவரியை துவக்கத் திட்டமிட்டிருக்கிறது சிட்ரன். யூ, ப்ளஸ் மற்றும் மேக்ஸ் என மூன்று வேரியன்ட்களாக புதிய C3 ஏர்கிராஸ் எஸ்யூவி வெளியாகியிருக்கிறது.
ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மற்றும் ஒரே ஒரு கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன், 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் என இரண்டு சீட்டிங் தேர்வுகளுடன் வெளியாகியிருக்கிறது சிட்ரன் C3 ஏர்கிராஸ்.
சிட்ரன்
சிட்ரன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி: இன்ஜின் மற்றும் விலை
இந்தப் புதிய C3 ஏர்கிராஸ் எஸ்யூவியில், 110hp பவர் மற்றும் 170Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய, 3 சிலிண்டர்கள் கொண்ட, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைக் கொடுத்திருக்கிறது சிட்ரன்.
மேலும், இந்த இன்ஜினானது, ஒன்றை 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வைப் பெற்றிருக்கிறது. இத்துடன் 7 இன்ச் TFT டிஸ்பிளே, 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் மற்றும் ஸ்டீயரிங் மௌண்டட் ஆடியோ கண்ட்ரோல்கள் வசதிகளும் புதிய C3 ஏர்கிராஸில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ரூ.9.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியாகியிருக்கிறது புதிய C3 ஏர்கிராஸ். தற்போது யூ வேரியன்டின் விலையை மட்டும் வெளியிட்டிருக்கிறது சிட்ரன். அடுத்த வரும் வாரங்களில் ப்ளஸ் மற்றும் மேக்ஸ் வேரியன்ட்களின் விலை அறிவிக்கவிருக்கிறது அந்நிறுவனம்.