2024ம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறதா ஹூண்டாயின் கோனா எலெக்ட்ரிக்?
செய்தி முன்னோட்டம்
ஹூண்டாய் மேம்படுத்தி வரும் இரண்டாம் தலைமுறை கோனா எலெக்ட்ரிக் கார் மாடலை 2024ம் ஆண்டே இந்தியாவில் வெளியிட வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதிக இடவசதி, நிறைய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் இரண்டாம் தலைமுறை கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியை மேம்படுத்தி வருகிறது அந்நிறுவனம்.
முன்னதாக இந்த ஆண்டுத் தொடக்கத்தில், புதிய கோனாவில் பயன்படுத்தவிருக்கும் பவர்ட்ரெயின் மற்றும் தயாரிப்புத் தேதி உள்ளிட்ட விபரங்களை வெளியிட்டது ஹூண்டாய் நிறுவனம்.
2019ம் ஆண்டு இந்தியாவில் கோனாவின் எலெக்ட்ரிக் மாடலை மட்டும் வெளியிட்டது ஹூண்டாய். 2020ம் ஆண்டு கோனா எலெக்ட்ரிக் ஃபேஸ்லிஃப்டை சர்வதேச சந்தையில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தாலும், இந்தியாவில் அதனை ஹூண்டாய் அறிமுகப்படுத்தவில்லை.
ஹூண்டாய்
ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக்: புதிய பவர்ட்ரெயின்
மேம்படுத்தப்பட்ட கோனா எலெக்ட்ரிக் மாடலை இரண்டு பேட்டரி தேர்வுகளுடன் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஹூண்டாய்.
குறைவான 48.6kWh பேட்டரியைக் கொண்ட வேரியன்டானது, 135PS பவர் மற்றும் 255Nm டார்க்குடனும், 64.8kWh பேட்டரியைக் கொண்ட வேரியன்டை 204PS பவர் மற்றும் 255Nm டார்க்குடனும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஹூண்டாய்.
418கிமீ ரேஞ்சுடன், 400V ரேபிட் சார்ஜிங் வசதியுடன புதிய கோனா எலெக்ட்ரிக் மாடலை அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன், லேன் கீப்பிங் அசிஸ்ட், பிளைண்டு ஸ்பாட் கொலிஷன் அவாய்டன்ஸ் அசிஸ்ட், இன்டலிஜன்ட் ஸ்பீடு லிமிட் அசிஸ்ட் மற்றும் டிரைவர் அட்டென்ஷன் வார்னிங் உள்ளிட்ட பல்வேறு ADAS பாதுகாப்பு அம்சங்களையும் கோனா எலெக்ட்ரிக் மாடலில் ஹூண்டாய் கொடுக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.